புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்? : பழ.நெடுமாறன் கேள்வி

Picture
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்?

சிறையில் இருக்கும் சீமானை விடுதலை செய்ய வலியுறுத்தி 'கருத்துரிமைக்களம்', சார்பில் கோவையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இன்று அவர் கோவையில் செய்தியாளர்களைச் ந்தித்தார்.இதன்போது,
"இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.
நியூசிலாந்தில் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,"விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு அரசியல் இயக்கத்திற்கான அம்சங்களையும், நேர்மையையும் கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய விடுதலை இயக்கம்" என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் இங்கே மட்டும் மத்திய, மாநில அரசுகள் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என்கிறார்கள். அது தீவிரவாத இயக்கம் என்கிறார்கள்.
இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்?

புலிகள் சார்பில் ஆஜராக வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Picture
  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடையை எதிர்காலத்தில் நீடிக்கலாமா? இல்லையா என்பது குறித்து டில்லி மேல் நீதிமன்றம் விசேட விசாரணை நடத்தி வருகிறது. புலிகள் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அங்கு ஆஜராகி வாதாடுவதற்கு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்விசேட வழக்கு நேற்று டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது ஆஜரான வைகோ இத்தடை நீடிக்கப்படக் கூடாது என்றவாறு தனது வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரினார்.அவரது வாதங்களைச் செவிமடுத்த பின்பே நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி எஸ். தணியாயன், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.புலிகள் இயக்கத்தை வைகோ சேராதவர் என்பதால் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதாட அருகதையற்றவர் என்று அவர் தெரிவித்தார். இவரது ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.


புலிகள் இயக்கத்தின் சார்பில் வைகோ வாதாட முடியாது என்று தடை விதித்தது.
ஆயினும் சட்டத்தரணி ஒருவர் மூலமாக சமர்ப்பணங்களை வைகோ மன்றுக்கு சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்து நீதிபதி இவ்வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரைஒத்தி வைத்தார்.

 ஈழப்போர் பற்றிய ஓவியக் கண்காட்சி: வைகோ இன்று திறப்பு 

Picture
இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், அந்நாட்டு மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று திருச்சியில் திறந்து வைக்கப்படுகிறது.
திருச்சி டி.எம்.எஸ்.எஸ்.எஸ். ஹாலில் ஓவியர் புகழேந்தியின் தயாரிப்பில் `போர் முகங்கள்` என்ற இந்த ஓவிய கண்காட்சியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்காட்சியை திறந்து வைக்கிறார். இந்நிகழ்வுக்கு திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்குகிறார்.
கண்காட்சி எதிர்வரும் 26ஆந் திகதி வரை நடைபெறும். தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்

Picture
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது.

எண்ணி ரெண்டே வருஷத்தில்.. படுபயங்கர சூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்

Picture
2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.‘‘2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.

2015ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா போயிங் தயாராகிறது

Picture
விண்வெளிக்கு வணிக நோக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல போயிங் நிறுவனம் ஸ்பேஸ் அட்வென்ஞ்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப சிஎஸ்டி-100 ரக விமானத்தை அது தயாரிக்கிறது. இந்த விமானம் 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பயணிகள் பார்க்க முடியும். நாசா விண்வெளி வீரர்களின் உதவியுடன் விண்வெளி பயணத்தை மேற்கொள்ள போயிங் நிறுவனம் பேச்சு நடத்துகிறது.

2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Picture
.இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த 8 அம்ச திட்டம் வெளியீடு

Picture
 காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் மோசமான நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எட்டு அம்சங்கள் அடங்கிய திட்டங்களை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 11ம் திகதி பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஆரம்பித்தது. இதனை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில், 17 வயது இளைஞர் ஒருவர் பலியானார். இதனால் அங்கு மூன்று மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இப்பிரச்சினைகு தீர்வினை முன்வைக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக்கூட்டம் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது காஷ்மீர் நிலவரம் குறித்த அனைத்துக் கட்சி குழுவின் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமர்ப்பிக்கப்பட்டு,அந்த அறிக்கை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், காஷ்மீரில் பதற்றத்தை தணிப்பதற்காக, 8 அம்ச தீர்வு திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாக், உடன் விளையாட தென்னாப்பிரிக்கா தயக்கம்

Picture
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து நிவாரண நிதி திரட்டுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட தென் ஆப்ரிக்கா அணி முன்வந்தது.அதன்படி 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிள் கொண்ட இந்த தொடர் அக்டோபர் மாதம் சவூதி அரேபியாவில் நடத்தவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாக் வீரர்கள் தொடர்ந்து சூதாட்ட வழக்கில் சிக்கி வருவதால் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட தென்னாப்பரிக்கா அணி மறுப்பு தெரிவித்துள்ளது

ஆஸ்கருக்கு போகிறது: ஆமிர்கானின் ‘பீப்லி லைவ்’ படம் 

Picture
  .புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் வெளியாகும் படங்களிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் தேர்வு கமிட்டி பரிந்துரை செய்து வருகிறது. 2010ம் ஆண்டுக்கு தேர்வான படத்தை இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் தலைமையில் அமைந்த 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது.  இதுபற்றி சேதுமாதவன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ், இந்தி, மலையாளம், வங்காளம், கொங்கனி மொழியில் உருவான 27 படங்களை கடந்த 19ம் தேதி முதல் 24ம் தேதிவரை தேர்வுக் குழுவினர் பார்த்தனர்.
இதில் ஆமிர்கான் தயாரித்த ‘பீப்லி லைவ்’ என்ற படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்றார். பீப்லி லைவ் படத்தை ஆமிர்கான் தயாரித்திருந்தார். விவசாயிகள் பிரச்னையை மையமாக வைத்து உருவான இப்படத்தை அனுஷா ரிஸ்வி இயக்கி உள்ளார். புதுமுகம் ஓம்கார் தாஸ் மாணிக்புரி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

‘எந்திரன்’ ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகம் சோளிங்கர் மலைக் கோயிலில் முட்டிபோட்டு படியேறிய ரசிகர்கள்

Picture
சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் இன்று காலை ரசிகர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் 1,305 படிக்கட்டுகள் உள்ள மலைக்கோயிலுக்கு ரசிகர்கள் முட்டிப்போட்டு படியேறினர்.ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்‘ படம் வரும் 1ம்தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Picture
Picture
Picture

எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை

Picture
நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்‌ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் : விஞ்ஞானிகள் 

Picture
   செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்

Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

மட்டக்களப்பு கரடியனாறு சம்பவத்தில் 60 பேர் பலி
இலங்கை விடயம் தொடர்பில் பான் கீ மூனுக்கு இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை :    அதிர்ச்சி தகவல்கள்
 - ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள்   குருதியில்  தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா
இரத்தினபுரியில் பதற்றம்! தமிழர் குடியிருப்புகள் தீக்கிரை! 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

Picture

மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?

Picture
Picture
Picture
Picture

    எந்திரன்

Picture

 யுத்தம் செய்

Picture

வாடாபோடா

Picture

        தா

Picture
Picture

கட்டுரைகள்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..

மகளிர் மந்திரம்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..

Picture

மருத்துவம்

Picture
Picture

இராசிபலன்

Picture
Picture
Picture

திமுக இனி வெல்லவே முடியாது: வைகோ

Picture
திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் கடும் ஆவேச அலை வீசுகிறது. எனவே திமுகவால் இனி வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது: பாகிஸ்தான்

Picture
காஷ்மீரில் ஊடுறுவல்களைத் தடுக்குமாறு கூறிய அமெரிக்காவிடம், அதுகுறித்து எங்களை அடிக்கடி தொந்தரவு செய்யாதீர்கள். உண்மையில் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியது தெரிய வந்துள்ளது.

Picture