இரண்டு முகம் - திரை விமர்சனம்
இது முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதை.
தனது வாழ்க்கையின் ஒரே லட்சியம் எப்படியாவது அமைச்சராகிவிடுவதுதான் என்ற 'லட்சியத்தோடு' திரிகிறார் சமையல்காரர் சண்முகசுந்தரத்தின் மகன் கரண். அதற்கேற்ப அவ்வப்போது அவருக்கு சந்தர்ப்பங்கள் வர, இளைஞர் அணி தலைவராகி, அடுத்தக் காட்சியிலேயே எம்எல்ஏவாகி, அதற்கும் அடுத்தக் காட்சியிலேயே மந்திரியாகி உடனே ஊழலும் செய்ய ஆரம்பித்து விடுகிறார்.
அவருக்கு செயலாளராக வருகிறார் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்யராஜ். கோடி கோடியாக சம்பாதிக்க துடிக்கும் கரணை நல்வழிப்படுத்தி அவரை நல்ல அரசியல்வாதியாக்க சத்யராஜ் நடத்தும் நாடகமும் அதிரடித் திருப்பங்களுடன் கரண் திருந்தும் நேரத்தில், அதை எதிர்த்து மோசமான அரசியல்வாதிகள் அரசையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இதிலிருந்து கரணும், சத்யராஜும் எப்படி அரசைக் காக்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
பரபரப்பான அரசியல் கதையை எடுத்துக்கொண்டு, அதில் காதல், கலாட்டா என ஒரு ஜனரஞ்சக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்தராஜ்.
அரசியல்வாதியாகத் துடிக்கும் வெள்ளை வேட்டி சட்டை இளைஞனாக கரண். தலைவர்கள் குரலை மிமிக்ரி செய்வதில் தொடங்கி, கார் கதவை திறந்து விட்டு, காலில் விழுந்து, கண்ர் வடித்து அவர் அரசியலில் முன்னுக்கு வரும் காட்சிகள் கச்சிதம். ஆனால் மந்திரி பதவியேற்ற முதல் நாளே பொது இடத்தில் பலகோடி லஞ்சம் வாங்குவதெல்லாம் ஓவர்.
அனல் பறக்கும் வசனங்களில் சத்யராஜ் வழக்கமான சவால்ராஜ். கரணைத் திருத்த அவர் போடும் சின்ன நாடகத்தில் சினிமாத்தனம் இருந்தாலும் சுவாரஸ்யம். இறுதிக்காட்சியில் அது வெடிக்கும்போது கலகலப்புடன் கலைகிறது பார்வையாளர்கள் கூட்டம். சத்யராஜின் பிளாஷ்-பேக்கில் வரும் பால்பவுடர் சமாச்சாரத்தை ஏற்கெனவே 'வால்டர் வெற்றிவேல்' படத்தில் பார்த்துவிட்டதால் மனதில் ஒட்டவில்லை.
புதுமுக நாயகி சுஹானி ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. ஏமாற்று அரசியல்வாதி வேடத்தில் பல அரசியல்வாதிகளை ஞாபகப்படுத்துகிறார் நாசர். குடமுருட்டியாராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். அவர் பேசும் போதெல்லாம் மாடு பற்றி பேசுவது கலகல. கஞ்சா கருப்பு அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார்.
எதிர்கட்சி, ஆளுங்கட்சி, ஆதரவு, எதிர்ப்பு, திடீர் ஆதரவு, நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பெரிது பெரிதாக யோசித்த இயக்குநர், அதைப் படமாக்கியதில் ஏகப்பட்ட குழப்பம். இடைவேளைக்கு முன், கரண் கையில் கல்லெடுக்கும் போதே, படத்தின் மிச்சக் காட்சிகளை ரொம்ப எளிதாக யூகிக்க முடிகிறது.
பரத்வாஜ் இசையில் ஒரு பாடல் ஓகே, மற்றபடி மகா மட்டமான பின்னணி இசை. தேவையில்லாத இடங்களிலெல்லாம் சம்பந்தமில்லாமல் பாடல்கள் வந்து இம்சிக்கின்றன. அப்துல்கலாமின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறது.
அந்நிய நாட்டு விதைகளால் ஆபத்தும், மலட்டுத் தன்மையும் இருக்கிறது என்ற அழுத்தமான கதையை சொல்ல வந்த இயக்குநர் அரவிந்தராஜ், திரைக்கதையில் சுவராஸ்யமான காட்சிகளை சொல்லாமல் விட்டுவிட்டார். திரைக்கதையில் பரபரப்பு இருந்தாலும் சுவராஸ்யம் குறைவு. இருந்தாலும், நக்கலும் நையாண்டியும் இருப்பதால் கொடுத்த காசுக்கு சிரிச்சுட்டு வரலாம்.
இரண்டு முகம் - பார்த்த பழைய முகம்
நடிகர்கள்
சத்யராஜ், கரண், சுஹானி, கஞ்சா கருப்பு, நாசர், எம்.எஸ்.பாஸ்கர்
இசை
பரத்வாஜ்
இயக்கம்
ஆர்.அரவிந்தராஜ்
தயாரிப்பு
கே.வைத்தியலிங்க உடையார்

சிறப்புச் செய்தி
மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?
இன்பர்சிட்டி
BLOG
கவிதை
காத்திருக்கும் காலம் - இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி
சிறுகதைகள்
நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும் -இளந்திரையன்
கட்டுரைகள்
கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன? -பழ.நெடுமாறன்
ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன? -கலைவேலு
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம் - சூரியதீபன்
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்
காசா: அறங்கள் மடிந்த இடம் - அ.முத்துக்கிருஷ்ணன்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்
மகளிர் மந்திரம்
குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..