ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள் குருதியில்
தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
கடந்த 61வருடங்களாக அறவழியாகவும் ஆயுத ரீதியாகவும் நடைபெற்ற ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப்போராட்டங்கள் குருதியில் தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது என்பதுதான் உண்மை என மட்டு. மாவட்ட நா. உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜேர்மனியில் நடைபெற்ற அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மகாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அறவழியில் நடத்தப்பட்ட போராட்டம் எப்படி குருதியில் முடியும் என நீங்கள் கேட்கலாம். தமிழ் தலைவர்களால் 1956ல் காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்டு தமிழ் தலைவர்கள் குருதி சிந்தினார்கள். இதுதான் முதல் குருதி.
1958ல் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் இரு மலையகத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதுதான் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட முதல் கொலை
இவ்வாறு தொடர்ந்த தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் இறுதியில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் கடந்த வருடம் (2009) மே 19ஆம் திகதி விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தமிழ் மக்களிடையே இலங்கை அரசு பல குழப்பங்களை திட்டமிட்டு செய்து வருகிறது.
விடுதலைக்காக புறப்பட்ட எமது இனம் பல கட்டங்களில் குருதி சிந்திய நிலையில் இரண்டு இலட்சம் மக்களை இழந்தவர்களாய் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களாய் 10 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அனைத்துலகிலும் இடம்பெயர்ந்தவர்களாய் 89 ஆயிரம் இளம் பெண்கள் கணவனை இழந்த இளம் தாய்மார்களாய் 25 ஆயிரம் பேர் அங்கவீனர்களாய் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் முகவரி தெரியாத முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அம்மாவை தேடும் பிள்ளையின் அழுகுரலும் பிள்ளைகளை தேடும் தாய்மாரின் ஒப்பாரியும் உறவுகளை தேடும் சொந்தங்களின் விம்மல்களும் அழுகுரல்களும் தான் இன்று ஈழத்தமிழர்களின் தேசிய கீதங்கள். எமது இல்லங்களை மட்டும் இழக்கவில்லை. துயிலும் இல்லங்களையும் இழந்திருக்கிறோம்.
உரிமைகள் உடமைகள் இழந்து பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை இழந்து நிற்கிறது. நிலத்திற்காக போராடிய இனம் இன்று 6 தகரங்களுக்காக கையேந்தி நிற்கிறது. சுதந்திரத்திற்காய் போராடிய இனம் இன்று சோற்றுக்காய் இலங்கை அரசிடம் கையேந்தி நிற்கிறது.
இந்த யதார்த்தங்களை உணர்ந்து மேற்குலகில் வாழும் மக்கள் வீழ்ந்து கிடக்கும் எமது இனத்திற்கு கைகொடுத்து தூக்கி விட வேண்டியதே இன்று முதலில் செய்ய வேண்டிய கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

சிறப்புச் செய்தி
மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?
இன்பர்சிட்டி
BLOG
கவிதை
காத்திருக்கும் காலம் - இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி
சிறுகதைகள்
நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும் -இளந்திரையன்
கட்டுரைகள்
கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன? -பழ.நெடுமாறன்
ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன? -கலைவேலு
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம் - சூரியதீபன்
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்
காசா: அறங்கள் மடிந்த இடம் - அ.முத்துக்கிருஷ்ணன்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்
மகளிர் மந்திரம்
குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..