Picture
001.ஏப்ரல் 14 முதல் மே 13 வரை.
காதல் விஷயத்தில் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். தூது விடும் பழக்கம் இவர்களிடத்தில் கிடையவே கிடையாது. எல்லாம் நேரடிப் பாய்ச்சல்தான். தங்கள் இச்சைப்படி எதிர் பாலினரை வளைப்பதற்காகப் பல்வேறு யுக்தியளைக் கையாளும் இவர்கள், அதற்காக பொய் சொல்லக்கூட தயங்கமாட்டார்கள். காதலில் ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் சட்டென்று இன்னொருவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இந்தத் தேதிகளில் பிறந்த பெண்களுக்கு தன் கையே மேலோங்கி நிற்க வேண்டுமென்ற எண்ணமும் இருக்கும். தாம்பத்ய உறவில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவசரக்காரர்கள். ஆனால் அனுபவிக்கத் தெரிந்தவர்கள்இச்சைப்படி எதிர் பாலினரை வளைப்பதற்காகப் பல்வேறு யுக்தியளைக் கையாளும் இவர்கள், அதற்காக பொய் சொல்லக்கூட தயங்கமாட்டார்கள்.

02. மே  14  முதல்  ஜூன்  13  வரை


இயற்கையிலேயே வளமையும் வனப்பும் மிக்கவர்கள். உணர்ச்சிபூர்வமானவர்கள். காதல் கற்பனைகளில் சிறகடித்துப் பறக்காமல் பூமியில் கால் பதித்தது நடப்பார்கள். அன்போடு பழகுவதில் இவர்களுக்கு ஆர்வமிருக்கும். தங்கள்மீது அன்பு செலுத்துவோரிடம் அதிகம் பரிவு காண்பிப்பார்கள்.
இந்தத்தேதியில் பிறந்த பெண்களுக்கு கூடிக்குலாவத் தெரிந்த கணவனைத்தான் பிடிக்குமே தவிர வெறுமனே கொஞ்சிப் பேசும் கணவனைப்பிடிக்காது. ஆண்கள், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை நடத்துவதிலும் மனைவியைத் திருப்திப்படுத்துவதிலும் வல்லவராக இருப்பார்கள்.

 03.ஜூன் 14 முதல் ஜூலை 13 வரை

இவர்களுக்கு காதல் என்பது மனத்தளவில்தான். செயலில் அத்தனை தீவிரம் காட்டமாட்டார்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணம் இவர்களிடம் உண்டு. எனவே எதையும் நளினமாக ரசித்து அனுபவிக்கவே விரும்புவார்கள்.
தாம்பத்ய உறவைப்பொறுத்தவரை உள்ளத்திற்காக ஒருவகையாகவும், உடலுக்காக ஒரு முறையாகவும், உலகத்திற்காக ஒரு வழியாகவும் வகுத்துக்கொண்டு இன்பம் அனுபவிப்பார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் உண்மையான உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது ஆண்களுக்குக் கடினமாகத் தோன்றும். ஆண்கள் கல்யாணத்திற்கு முன்பு எப்படிப்பட்டவராக இருந்தாலும் கணவரான பின்பு சபலபுத்தி குறைந்து குடும்ப வாழ்வே முக்கியமாகிவிடும்.

04. ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை
ஆழ்ந்த அன்புணர்ச்சியும், காதல் உணர்வும் இல்லாத வாழ்க்கையை இவர்கள் விரும்பவே மாட்டார்கள். முக்கியமாக தன் உள்ளுணர்வின் ஆழ்ந்த கருத்துக்களையோ, அடிப்படை நோக்குகளையோ பிரதிபலிக்கக் கூடியவரையே விரும்புவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தன் கணவனை எப்போதும் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருக்க விரும்புவார்கள்.
ஆணாக இருந்தால் தன்னிலே லயிப்பும் தன்னைப்பற்றியே அதிக அக்கறையும் கொண்டிருப்பார்கள். தாம்பத்ய உறவைப்பொருத்தவரை அதன் உச்சத்தை அடையும்வரை இவர்கள் ஓயவேமாட்டார்கள்.

05. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை

அறிவிற் சிறந்த இவர்கள் காதலில் மட்டும் பகுத்தறிவுக்கு இடந்தராமல் உணர்ச்சி வேகத்திலேயே ஈடுபடுவார்கள். பண்டம் மாற்றிக் கொள்வதைப் போலக் காதலை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.
தாம்பத்ய உறவைப் பொருத்தவரை இவர்கள் நினைப்பில் காமவுணர்ச்சி எழுந்தவுடனேயே அதற்குரிய வடிகாலைத் தேடிக்கொள்ள முனைந்து விடுவார்கள்.
இந்த மாத்தில் பிறந்த பெண்கள் தம் எண்ணப்படியும் தீர்மானத்தின்படியுமே எல்லோரையும் ஆட்டிப்படைத்து அதிகாரம் செய்வார்கள். ஆண்கள், குடும்ப நிர்வாகத்தின் பொறுப்புகளை ஏற்கப் பொருத்தமானவராகவும், குடும்பத்தில் பற்றுடையவராகவும் விளங்குவார்.

07.  அக்டோபர் 14 முதல் நவம்பர் 13 வரை

இவர்களது காதலில் ருசிகரமான அனுபவங்கள் அனைத்தும் உண்டாகும். அதாவது காதலில் இன்பத்தை மட்டுமன்றி காசாரம், கசப்பு முதலான சுவைகளையும் கூட ரசித்து அனுபவிப்பார்கள். அமைதியான, ஆனந்தமான சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும்போதெல்லாம் யாருடனாவது சேர்ந்து பழகுவதையும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பதையும் விரும்புவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் காதல் துறையில் அசகாய சூரர்களாக இருப்பர். பெண்கள், மற்றவரது தேவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வர்.

08. நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை

இவர்கள் காதல் விஷயத்தில் ஆவேசம் உடையவர்கள். கல்யாணமான பிறகும்கூட காதலிக்கும் நபர்களாக இருப்பார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது இவர்களுக்கே பொருத்தமுடையதாக இருக்கும். ஆமாக வேட்கையே ஆன்மீகத் தேடலாக மாற்றிவிடுவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த பெண், தம் கணவரையும் வீட்டையும் குடும்பத்தையும் கவனிப்பதில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வாள். ஆண்களாக இருந்தால் மற்றவர்களிடம் உள்ள நிறைகளைவிடக் குறைகளே இவர்களது கண்களுக்குத் தெரியும்.

09. டிசம்பர் 14 முதல் ஜனவரி 13 வரை

இவர்கள் காதல் விஷயத்தில் ஒன்று, அக்கறையே இல்லாமல் இருப்பார்கள். அல்லது ஆவேசப்பட்டுவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் காதலிப்பதும் காதலுக்கு இடம்கொடுப்பதும் அபூர்வம். இவர்கள் திருமணம் செய்துகொள்வதற்காகவே காதலிப்பார்கள். இவ்ரகளுக்குக் காதலில் ஆசையைவிட காமத்தின் வேகமே அதிகமாக இருக்கும். உள்ளுணர்வை உடலுணர்வு மிஞ்சிவிடும்.
இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் திறமைசாலிகள். தன் நலத்தைவிட குடும்பநலனே முக்கியம் என்று நினைப்பார்கள். பெண்கள், கணவரின் பிரியத்திற்கு ஏற்பவே நடந்துகொள்வர்..

10.  ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை

இவர்களின் காதல் ஆழமானது. காதலித்து திருமணம் செய்துகொள்வதைவிட, திருமணம் செய்தபிறகு காதலிப்பதையே விரும்புவார்கள். காதலிக்க ஆரம்பித்துவிட்டால் இரவு பகல் பாராமல் காதலிப்பார்கள். தாம்பத்ய உறவைப் பொருத்தவரை இவர்களுக்கு எந்த நேரத்திலும் உடல் உணர்ச்சிகள் உந்திக்கொண்டிருக்கும்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் விஷயத்தில் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். ஆண்கள், காதலிக்கும்போது அந்தரங்க உறவின் இன்பத்தை வற்புறுத்திப் பெறமுயல்வதும் உண்டு.


11.  பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 வரை

வர்களது காதல் உள்ளத்தில் நிறைவுபெற்ற பிறகுதான் உடலுணர்வுகளாக வெளிப்படும். உள்ள நிறைவோடு காதல் ஏற்பட்டுவிட்டால் எந்தக் கட்டுப்பாட்டையும் இவர்கள் மீறிவிடுவார்கள். இவர்களது காதல் பெரும்பாலும் முதலில் நட்பில்தான் தொடங்கும்.
தாம்பத்ய உறவைப் பொருத்தவரை சமுதாயத்தின் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டே இவர்களது உறவு இருக்கம்.
இந்த மாதத்தில் பிறந்த பெண் தன் விஷயத்தில் யாரும் தலையிடக்கூடாது என்று விரும்புவாள். ஆண்கள் தங்களுக்குச் சமமாக தோழமை உணர்ச்சியுடையவர்களையே அதிகள் விரும்புவர்.


12.  மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை

இவர்கள் பெரும்பாலும் கண்வீச்சினால் கவர்ந்திழுப்பார்கள். அல்லது கண் வீச்சினால் கவரப்படுவார்கள். காதல் அனுபவத்தைவிடக் காதலைப்பற்றி அதிகம் கனவு காணும் இவர்களது தாம்பத்ய உணர்ச்சிவசப்பட்டதாக இருக்கும்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தன் கணவருக்கு ஆத்மார்த்த துணைவியாக விளங்க ஆசைப்படுவார்கள். ஆண்கள், தமது மனைவியை அன்போடு நேசிப்பவராகவும் மனைவிக்குரிய அந்தஸ்தையும் மதிப்பையும் தருபவராகவும் இருப்பர்.