கன்னி ராசி

Picture
உத்திரம் 2, 3, 4 பாதங்கள் அஸ்தம் , சித்திரை 1,2 பாதங்கள் (ட,டோ,ப,பா,பு,பூ,பே,பை,ந,மே)

புத்தி சாதுர்யத்தால் எதையும் சாதித்துக்கொள்ளும் திறமை படைத்த கன்னி ராசி நேயர்களே! உங்களுக்கு எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.

ஆரம்பப் பகுதி உங்களுக்கு கொஞ்சம் சஞ்சலத்தைக் கொடுத்தாலும் கூட இந்த ஆண்டின் பிற்பகுதி உங்களுக்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். அதற்குக் காரணம் வருகிற மே முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கும் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியையே பார்ப்பதுதான்.

அந்த கால கட்டத்தில் திருமணம் தடைப்பட்டிருந்த கன்னி ராசி நேயர்களுக்கு மனமகிழ்ச்சி அடையும். திருமணம் நடைபெரும். தாயார் நலம் பெறுவார். தாயாதி உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டிவாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகளும் ஏற்படு வாய்ப்பு உண்டு.

சிலர் கூட்டாளியுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. அந்த தொழில் நல்ல அபிவிருத்தி அடையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்களால் உரிய நேரத்தில் தக்க உதவி கிடைக்கும்.

புத்திர புத்திரிகள் மேன்மை அடைவார்கள். அவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புத்திர புத்திரிகளுக்கு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் கால தாமதமாகிக் கொண்டே வந்திருந்தால் தற்போது அது கைக்கூடி திருமணம் நடைபெறும்.

புனிதப் பயணம் மேற்கொள்வீர்கள். தெய்வதரிசனம் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். அலுவலகப் பணியாளர்களுக்கு இடமாறுதலுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். அதே நேரத்தில் முதல் நான்கு மாதங்கள் சற்று சோதனையான காலமாக இருக்கும்.

பெண்களால் மனக்கலக்கமும் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதில் கலக்கம் ஏற்படும். மனோதைரியம், மனோபலம் குறையும். யாரைப்பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். டென்சன் ஏற்படும். முன்கோபம் வரும் தாயாரின் உடல் நலம் பாதிக்கலாம். தங்க நகைகள், பொருள்கள் இவற்றை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சுபகாரியங்கள் தாமதமாகும். மருத்துவ செலவுகள் அதிகமாகும்.

அடுத்தவர்களுடைய பிரச்சினையில் தலையிடுவதோ அல்லது மற்றவர்களுக்காக ஜாமீனுக்குப் போவதோ கூடாது. அப்படிச் சென்றால் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொண்டு கோர்ட் கேஸ் போலீஸ் ஸ்டே ஷன் என்று அலைய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செல்லாது. அலுவலகத்தில் உங்களுடன் யாரும் ஒத்துப் போக மாட்டார்கள் . எனவே இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களை எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் கழிக்க வேண்டும்

மாத வாரிப் பலங்கள்

ஜனவரி: புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களால் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கவே செய்யும். குடும்பத்தில் விருந்தினரின் வருகை அதிகமாக இருக்கும். அதன் காரணமாக மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்பு உன்டு. சொல்வாக்கு செல்வாக்கு மேன்மை அடையும். புகழ் கீர்த்தி மேலோங்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு பூமிலாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. இவரது உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி: எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கக்கூடும். மருத்துவச் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தாரின் தேவைகளை காலமறிந்து பூர்த்திசெய்ய இயலாத காரணத்தால் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. புத்திர புத்திரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலையே காணப்படும்.

மார்ச்: அலைச்சல்கள் அதிகமாகலாம். அதன் காரணமாக ஓய்வு உறக்கம் இல்லாமல் போகும். டென்ஷன் அதிகமாகும். எதற்கெடுத்தாலும் கோபம் வரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்காது. பெண்களால் தொல்லைகள் வர வாய்ப்புண்டு. இருப்பினும் கடுமையான உழைப்பின் காரணமாக இந்தத் தொல்லைகளையெல்லாம் மிக சாதாரணமாக எதிர்க்கொள்வீர்கள். எதிரிகள் அடங்கிப் போயிருப்பார்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.

ஏப்ரல்: வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களில் போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் தொல்லைகளும் விபத்துகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பெரியோர்களின் விரோதங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாத சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்பட வாய்ப்புண்டு.

மே: சொல்வாக்கு செல்வாக்கு உயரும். புகழ் அந்தஸ்து கீர்த்தி மேலோங்கும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான சூழ்நிலைக் காணப்படும். சுபச் செலவுகள் அதிகமாகும். இருப்பினும் கவனக்குறைவாக இருந்தால் தேவையில்லாத வம்பு வழ்க்குகளில் சிக்கிக் கொண்டு தவிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

ஜூன்: மனதில் இனம் புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதிரிகளால் தொல்லை துயரங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். எதிர்பாராத விபத்துக்கள், அவமானங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கண் சம்பந்தமான பாதிப்பு, பித்த ரோகம், மனைவியுடன் சண்டைச் சச்சரவு என்ற இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் சோதனையான மாதமாகவே இருக்கும். அலைச்சல்கள் அதிகம் ஆகும். செய்யக்கூடிய காரியங்கள் தடைகளும் கால தாமதமும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஜூலை: தொழில் வியாபாரம் மேன்மை அடையும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கவே செய்யும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கண்வன் மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். எதிரிகள் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்து போவார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எடுத்த காரியம் கூட வெற்றியுடன் முடியும்.

ஆகஸ்ட்: இதுவரை உங்களை வாட்டிவந்த உடல் நலிவு நீங்கும். உடல் நலம் பெருவீர். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். தன தான்ய அபிவிருத்தி இருக்கும். சிலருக்கு கௌரவப் பதவி பட்டங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் உடலில் ஆரோக்கியம் குறையும். ரத்த சம்பந்தபட்ட கோளாறுகள், கொப்பளங்கள், சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

செப்டம்பர்: தொழில் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை நிலவும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போகும். தேவைக்கேற்ற வருமானம் போதாத சூழ்நிலைகள் உருவாகும். எதிரிகளின் தொல்லைகள் அதிகமாகும். அவர்களால் அவமானமடைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்காது. விரையச் செலவுகள் அதிகமாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் பொருமையிடனும் நிதானத்துடனும் அணுகினால் வெற்றி பெறுவீர்கள்.

அக்டோபர்: உடலில் உஷ்ண ஆதிக்கம் அதிகமாகும். விரையச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே யோசித்து செலவு செய்வது நலம். அரசுத் துறையினரால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வம்பு வழக்குகள் தேவையில்லாத பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. இருப்பினும் தொழில் வியாபாரத்தில் ஒரு இனக்கமான நல்ல சூழ்நிலையே காணும்.

நவம்பர்: புத்திரப்பேறு இல்லாத சிலருக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு கௌரவ பதவி, பட்டங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் . அவர்களால் எப்போதும் நன்மை உண்டு. மனோபலம் அதிகமாகும். சகோதரர்கள் நலமடைவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டு.

டிசம்பர்: மனோபலம் அதிகமாகும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகளின் தொல்லைகள் ஒழிந்துப்போகும். வெளியூரில் வேலைப்பார்க்கும் சிலர் தன் ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நல்ல லஷ்மி கடாஷம் பெற்றவராக இருப்பீர்கள். மொத்தத்தில் இந்த ஆண்டின் கடைசி 8 மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை சென்று வழிபட்டுவரவும். ஞாயிறு தோறும் ராகு வேலையில் துர்க்கை கோயிலுக்கு சென்று வழிபட்டுவர இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீண்டும் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.