எந்திரன் பட முன்னோட்டம்
உச்சத்தின் திட்டம்
மகள் திருமணத்துக்கு தன்னிடம் மக்கர் செய்த கட்சித் தலைவர்களுக்குக்கூட நேரில் சென்று பத்திரிகை வைத்து திக்குமுக்காட செய்தார் உச்சம். வருங்காலத்தில் இவர்கள் பிரச்சனை செய்யக் கூடாது என்ற ஃபியூச்சர் பிளான்தான் இதற்கு காரணம். மெட்டல் மனிதன் வேறு திரைக்கு வருகிறதல்லவா? தவிர எதிர்ப்பவர்களையும் அரவணைத்து ஆதரவாளர்களாக்கிக் கொள்வதுதானே அவரது ஸ்டைல் என புன்னகைக்கிறார்கள்.
பரிதாப பரம்பரை
சிட்டி முழுக்க பேனர் கட்டியும் கல்லாவை நிரப்பவில்லை பையன்கள் பட இயக்குனரின் பாரம்பரிய படம். இதனால் படத்தை தயாரித்த அரசியல் வாரிசு அப்செட்டில் இருக்கிறாராம். பணத்தால் படத்தை எடுக்கலாம், கலெக்சனை எடுக்க முடியுமா?
திணறிப்போன சேனாபதி
சேனாதிபதியின் புதிய படத்தை பெரும் தொகைக்கு வாங்கியிருப்பவர் சக்திமயமான இயக்குனர் கம் தயாரிப்பாளர். இந்த சக்திமயமானவர் கதை சொல்ல நெருங்கி வரும்போதெல்லாம் சேனாதிபதி நெட்டித் தள்ளியிருக்கிறார். இப்போது இவரது பேச்சைக் கேட்டுத்தானே பிரிவியூ முதல் பேட்டி வரை கொடுக்க வேண்டியிருக்கிறது என்று திகிலடித்துப் போயிருக்கிறார் சேனாதிபதி.
கள்ளக்காதலுக்கு டும் டும் ?
திருமணமான ஒருவர் இன்னொருவருடன் காதல் கொண்டால் அதனை கள்ளக் காதல் என்று எட்டுகால செய்தி போடுகிறவர்கள் நடனப் புயலின் காதலை மட்டும் அப்படி அழைப்பதில்லை. போகட்டும். பாவப்பட்டவர்களுக்கு ஒரு நீதி, பிரபலமானவர்களுக்கு ஒரு நீதிபோல. நடனப் புயல் தனது கள்ளக் காதலியை வரும் டிசம்பரில் மணமுடிக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு புயலின் குடும்பத்தில் பரிபூரண சம்மதமாம்.
வாரிசு தந்த மகிழ்ச்சி
அந்த இருபெரும் வாரிசுகளுக்கு நடுவில் பலத்த போட்டி. யார் நல்ல கலெக்சன் தரும் படத்தை வாங்குவது என்பதற்கு இருவரும் பரமபிரயத்தனம் செய்கிறார்கள். சமீபத்தில் வாரிசுகளில் ஒருவர் பட்ஜெட் படம் ஒன்றைப் பார்த்து பரவசப்பட்டிருக்கிறார். மெகா பட்ஜெட்டில் கவனம் செலுத்தியவர்கள் பட்ஜெட் பக்கமும் பார்வையை திருப்பினால் நல்லதுதானே என குதூகலிக்கிறது கோடம்பாக்கம்.

இலையோடு சேரும் பூ
ஆந்திராவில் பருப்பு வேகாத பூ நடிகை தமிழகத்தில் இலையோடு சேரப்போகிறாராம். இவரது காதல் கணவர் சூரியனுக்கு தூபம் போடுகிறவர். என்றாலும் சூரியன் பார்ட்டியில் இன்னொரு பூ இருப்பதால் முதல் மரியாதை அவருக்குதான் கிடைக்கும் என்ற கால்குலேஷனின் அடிப்படையில் இலையை தேர்வு செய்திருக்கிறார். இங்காவது பிழைப்பு ஓடினால் சரிதான்.
கிசுகிசு நடிகர்
ஒரு படம் வெளிவரும் போது பரபரப்புக்காக படத்தில் நடித்த ஹீரோவும், ஹீரோயினும் லவ்வுகிறார்கள் என வாரிவிடுவது சகஜம்தான். ஆனால் ஆயிரத்தில் ஒருவனின் படம் வரும்போது மட்டும் இந்த கிசுகிசு எல்லை மீறுகிறது. தமன் நடிகையுடன் நடித்த போது இவருக்கும் அவருக்கும் லவ் என்றார்கள். இப்போது ஸ்வீட் கடை நடிகையுடன் நடித்த மகான் வெளிவந்திருக்கிறது. இப்போது நடிகரை முடிச்சுப் போட்டிருப்பது இவருடன்தான். இந்த செயற்கை கிசுகிசு இவர்களுக்கு எப்போதுதான் திகட்டுமோ?
சேனாபதியின் சீக்கிரட் பிளான்
சேனாதிபதி நடிகர் ஈழத்துக்கு எதிரான தேசிய கட்சியின் தலைவரின் மகனை சந்தித்ததில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் வருத்தம். சில வெளிநாடு வாழ் தமிழர்கள் இவரது படத்தை புறக்கணிக்கவும் செய்தனர். இந்தக் கசப்பை சீறும் தமிழனின் படத்தில் நடித்து போக்கிக் கொள்ள நினைக்கிறார் சேனாதிபதி. இதனால் சீறும் தமிழர் சிறையில் இருந்தாலும் இணைந்து படம் பண்ணுவது உறுதி என தயாரிப்பாளரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார்.
அப்செட் மாமி
போதை வியாபாரியின் ஃபோனில் மாமியின் போன் நம்பர் இருப்பதாக வந்த வாந்தியை ஆந்திர போலீஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார். இதனால் அப்செட்டில் இருக்கிறார் மாமி. எனது மகளை மட்டும் துரத்தி துரத்தி பிரச்சனை பிடித்தாட்டுகிறதே என புலம்பிக் கொண்டிருக்கிறார் மாமியின் மம்மி.
அலட்டல் ஹீரோயின்
காத்தாடி ஹீரோயினைப் பார்த்து ஆத்தாடி என அரண்டு போயிருக்கிறது கலையுலகம். காத்தாடியின் புரமோஷன் எதற்கும் இவர் தலைகாட்டவில்லையாம். போதாதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று அலட்டல் வேறு. இதனால் நடிகையின் பெயரைக் கேட்டாலே நாலடி தள்ளிப் போகிறார்கள் தயாரிப்பாளர்கள்.