சிம்மம் மகம், பூரம், உத்திரம்1ம் பாதம்
(ம,மா,மீ,மு,மூ,மெ,மொ,மோ, மெள,டி,டீ,டு,டே)
அஞ்சா நெஞ்சமும் மனோ தைரியமும் எதிலும் முன்னணியில் நிற்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட சிம்மராசி நேயர்களே! உங்களுக்கு எங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருமானத்திற்காக அதிகமாக அலையவேண்டிய சூழ்நிலை ஏற்பட, முதல் நான்கு மாதங்களுக்கு அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நல்ல பலன்களே நடைபெறம். சனியின் பாதிப்புகள் உங்களை எந்த அளவிலும் பாதிக்காது. தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் மற்றும் வண்டிவாகனச் சேஎக்கைகள் ஏற்படும். இருப்பினும் உங்களிடம் வருபவர்கள் உங்களது கோபத்தைக் கிளறுவது போலவே பசுவார்கள். ஆகவே பொறுமை காப்பது அவசியம்.
தொழில் வியாபாரம் மேன்மை அடையும், கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூநிலை காணப்படும். வேலையில்லாமல் துன்பப்பட்ட சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த காலகட்டத்தில் கோர்ட் கேஸ் இவைகளில் இருந்து தீர்ப்பு வருமானால் இது உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சிலர் புனிதப் பயணங்களை மேற்கொள்வார்கள். புத்திர புத்திரிகளின் வகையில் செலவினங்கள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கங்களில் விரையங்கள். ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு திடீர் யோகம் திடீர் பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வீடு மனை வாங்குவதற்கான வாய்ப்பும் உண்டு.
இருப்பினும் மே மாதத்திலிருந்து கொஞ்சம் சோதனையான காலமாக இருக்கும் முகத்தில் சோர்வு காணப்படும். ஒருவிதமான அசதி இருந்துக்கொண்டே இருக்கும். தொழில் வியாபாரம் மந்த கதி அடையும். தேவையில்லாத வில்லங்க விவகாரங்கள் பிரச்சினைகள் வந்துசேரும். புத்திர புத்திரிகளின் வாழ்க்கை முன்னேற்றம் தடைபடும். கல்வியில் கனிசமான மதிப்பெண்களைக் கூட பெறமுடியாமல் போகலாம். செல்வாக்கு செல்வாக்கில் குறைவு ஏற்படும். அலைச்சல் அதிகமாகும். மனநிம்மதி இல்லாமல் உறக்கம் கெட்டுப்போகும். அலுவலகத்தில் இருப்பவர்க்களும் வேலைப்பளு அதிகம் ஆகும். உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு விரும்பாத இடத்திற்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புஉண்டு.
தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படும். தாயாரின் சம்பந்தப்பட்ட உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும், விரோதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவர்களது உடல் நலம் பாதிக்கபடலாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
இந்த சூழ்நிலையில் யாருக்கும் ஜாமீனுக்கப் போனால் அந்தக் கடனை நீங்கள் அடைக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் சென்ற இடம் உங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டியது இருக்குமானால் தற்சமயம் அவர்கள் உங்களைத் துரத்தித் துரத்திப் பணம் கேட்பார்கள். எனவே இந்த ஆண்டின் பிற்பகுதியை நீங்கள் எச்சரிககையுடன் நிதானத்துடனும் கழிக்க வேண்டும்.
மாதவாரியான பலன்கள்
ஜனவரி: மனக்கவலை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படும். தேவையில்லாமல் வலியவந்து இடைஞ்சல்களில் தடைகள் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் அதிகமாகும் . பணவிரையம் ஏற்படும். மனைவியின் கோபமும் உபத்திரவமும் மனதை வேதனைப் படுத்தும். அலைச்சல்கள் அதிகமாகும். உறக்கம் கெட்டுப்போகும். குடும்பத்தாருடன் கருத்துவேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. புத்திர புத்திரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
பிப்ரவரி: கணவன் மனைவியரிடையே உறவு சீரடையும். ஆடை ஆபரணம் சேர்க்கைள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் எதிரிகளால் தொல்லைகள் இருந்துக்கொண்டே இருக்கும். செல்வாக்கு மேன்மை அடையும். புத்தி சாதுர்த்தியம் மேலோங்கும். விரையச் செலவுகள் அதிகமாகும். இருப்பினும் இறைவனின் அருளால் சில புதிய பலன்கள் வெற்றி கொள்வீர்கள்.
மார்ச்: பயணங்கள் ஏற்படும். ஆனால் அது அந்த அளவு எதிர்பார்த்த பலனைக் கொடுக்காது. பெரியோர்களில் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு சலசலப்பு ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெண்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
ஏப்ரல்: புதிய ஆடை, ஆபரணம், அணிமணிகள். வாங்க வாய்ப்புகள் ஏற்படும். விருந்த கேளிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். பெண்களால் சில நன்மைகள் ஏற்படும். ஆனால் செய்யும் காரியங்களில் அவ்வப்போது சிறு சிறு தொய்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழிலில் சற்று மந்த நிலை ஏற்பாடு. குடுப்பத்தாரின் போக்கிற்கு ஆதரவாக செயல்பட்டீர்களேயானால் சிறு சிறு பிரச்சனைகளளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
மே: அறிவுத்த்திறமை மேலோங்கும், எடுத்தக் காரியங்களையெல்லாம் வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். மனதில் உறுதியும் தெளிவும் பிறக்கும். தந்தை, மேன்மை அடைவார். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டு. உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலிலும் கூட உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம். ஆடம்பரச் செலவுகள் அதிகமாகும். புதிய நண்பர்கள் வந்து சேருவார்கள். அவர்களால் நன்மை உண்டு.
ஜூன்: விரையச் செலவுகள் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். கொடுக்கல் வாங்கலில் சிற்ப்பான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுவரை இருந்துவந்த எதிரிகளின் தொல்லைகள் ஒழிந்துபோகும். புத்தி சாதுர்யம் மேலோங்கும். தன தான்ய லாபம் கிடைக்கும். புத்திரப்பேறு இல்லாத சிலருக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
ஜூலை: இதுவரை உங்களை வாட்டி வந்த உடல் நலிவிலிருந்து விடுதலை பெருவீர்கள். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். அலுவலகத்தில் உங்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு கெளரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் மேன்மை அடைவரார். அவரால் உங்களுக்கு நன்மைகள் உண்டு. புதிய நண்பர்கள் வந்து சேர்வார்கள். பொருள் லாபம், தனலாபம் கிடைக்கும். பயணங்களினால் நன்மைகள் ஏற்படாது.
ஆகஸ்ட்: ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாகும். விருந்து கேளிக்கைகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல உணவு உடை, சரியான காலத்துக்குள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். இருப்பினும் சில தீய நண்பர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு அரசு காவல் துறையினரால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் அமைதியாக இருந்து வெற்றிகரமாக சாதித்துக்கொள்வீர்கள்.
செப்டம்பர்: உடலில் உஷ்ணத்தின் ஆதிக்கம் அதிகமாகும். கண்களில் பாதிப்புகள் ஏற்பட வய்ப்பு உள்ளது. மார்பு பாதிப்பு இருமல் இளைப்பு ஏற்படக்கூடும். பித்த வாத சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் தொல்லைகள், விரையச் செலவுகள் ஏற்படும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் யாரிடமாவது பணவிஷயத்தில் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிரிகளால் தொல்லைகளும் அவமானங்களும் நேரிடலாம். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்காது. புத்திரப்பேறு இல்லாத சிலருக்கு புத்திரப்பேறு கிடைக்க வாய்ப்பு உண்டு.
அக்டோபர்: சொல்வாக்கு செல்வாக்கு கௌரவம் மேலோங்கும். அதிகாரம் உண்டாகும். எதிரிகள் நசிந்து போவார்கள். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். சகோதரர் மேன்மை அடைவார். அவரால் சில நன்மைகள் உண்டு. தொழில் வியாபாரம் மேன்மை அடையும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
நவம்பர்: மனபலம் அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். பழைய கடன்கள் அடைப்படும். சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவரது உடல் நலம் பாதிக்கக்கூடும். அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகள் அதிகமாகும். கடன் காரர்களால் மனக்கலக்கம் ஏற்படும். புத்திர புத்திரிகளால் கவலையும் வேதனையும் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் திருப்தி இருக்காது. வாழ்க்கைத் துணையின் உடல் நலன் பாதிக்கபடலாம். மொத்தத்தில் இவ்வருடத்தின் முன்பகுதி சிறப்பாகவும் பின் பகுதி சுமாராகவும் இருக்கும்.
பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி தோறும் புனுகு சாத்தி பைரவரை வழிபட்டு வந்தால் இந்த ஆண்டு முழுவதும் சிறப்புடையதாக இருக்கும்.
மீண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.