இன்று நாள் எப்படி ?

Picture

23அக்டோபர் - 2010 -  சனிக்கிழமை Saturday, 23 October 2010

இன்று!


.

மேஷம்  நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். புதிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். வரவு வாயிலைத் தேடி வரும் முன்னே செலவுகள் வந்து சேரலாம். பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம் விரயங்கள் மேலோங்கும் நாள். விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். வெளிவட்டார பழக்க வழக்கத்தில் கூடுதல் விழிப்பு ணர்ச்சி தேவை.

மிதுனம்
:   யோகமான நாள். அந்நியர் ஒத்துழைப்போடு எண்ணிய காரியத்தை எளிதில் நிறைவேற்றுவீர்கள். வருமானம் இருமடங்காகும். ஆடை, ஆபரணச் சேர்க்கையால் அகம் மகிழ்வீர்கள்

கடகம் :.தொட்ட காரியங்களில் துரிதமாக நடைபெறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிச் சேர்க்கும் வாய்ப்பு உருவாகும்.

சிம்மம் .  பொருளாதார நெருக்கடி அகலும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து போற்றும் காரியமொன்றை செய்து கொடுப்பர். விட்டுப்போன வாய்ப்புகள் மீண்டும் வந்து சேரலாம்.                                                              
கன்னி :.சஞ்சலங்கள் தீர சனிபகவானை வழிபட வேண்டிய நாள். மற்றவர் களுக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வாதாடக் கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம்.
.துலாம் நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாளை செய்யலாம் என நினைத்த காரியமொன்றை இன்றே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு பெண்வழி ஒத்துழைப்பு கிட்டும்
.
விருச்சிகம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வருங்கால நலனைப் பற்றிச்சிந்திப்பீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்
தனுசு .   கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வதைக் கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும்.  
                                                                  
மகரம்:
நண்பர்கள் நல்ல தகவல் களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். தாய்வழி ஆதரவு பெருகும். தொழில், உத்யோகத்தில் உயரதி காரிகளால் பாராட்டுக்களைப் பெறும் வாய்ப்புண்டு.
கும்பம் :    முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தொழில் ரீதியாக புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்த முற்படுவீர்கள்.
                                                                     
மீனம் : .எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வந்து சேரும் நாள். கவுரவம் அந்தஸ்து உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் நட்பு கிட்டும்.

Picture

2010 ஆண்டு ராசி பலன்

Picture

22.10-10 முதல் 28.10-10 வரை

மேடம்
 


அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
ஜன்ம ராசியில் 22 காலை 6.20&க்கு மேல் சந்திரன் பிரகாசித்து நன்மை புரிகிறார். நாவன்மையும், செயல்திறனும் கூடும். பண வரவுகள், பாராட்டுகள் சேரும். ஐப்பசியில் சூரியன் நீசமாகி பலமிழந்து, சப்தமஸ்தானத்தில் அமர்கிறார்.

உடனிருக்கும் புதனும், சுக்கிரனும் சரியாக அமையவில்லை. குடும்பத்தில் விவாதங்களை தவிருங்கள். 22, 23, 24 தேதிகளில் பண வரவு உண்டு. 3ம் வீட்டு கேது சில குறுக்கு வழிகளைக் காட்டுவதால் செயல் தடுமாற்றங்கள் வரலாம்.

அஷ்டமத்து செவ்வாய் வீண் மனோபயம், எதிரிபயம் தரலாம். 6ம் வீட்டு சனி ஆதரவாக இருக்கிறார். 25, 26 தேதிகளில் விரயத்தில் குரு அமர்ந்திருப்பதால் ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். 27, 28 தேதிகளில் கேதுவுடன் சஞ்சரிக்கும்

சந்திரன் செவ்வாயால் பார்க்கப்படுகிறார். ரசாயனம், மருந்து தயாரிப்பாளர்கள் கவனமாக செயல்படுங்கள். செவ்வாய், சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்து, சந்திரனை பார்ப்பதால் தீய நட்பு காரணமாக வீண் சண்டை, சச்சரவுகள் நிகழலாம். அமைதியாக இருங்கள்.
 இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்
எதிர்ப்புகள் அதிகமாவதால், தங்கள் உழைப்பு கூடுகிறது. 24, 25 தேதிகளில் குடும்ப நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். அரசு பணியாளர்களும் வழக்குகளில் தீர்ப்பை எதிர்பார்ப்போரும் நற்செய்திகளைப் பெறுவார்கள்.

26ம் தேதி வரை பண வரவுக்கும் கவுரவ நடவடிக்கைகளுக்கும் குறைவிருக்காது. ஆனால், 26 முதல் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. புதன் 4ம் வீட்டிலிருந்து 5வது வீட்டுக்கு மாறி, பொருளாதார கட்டுப்பாடுகளைத் தருவார். உடன் சூரியனும், சனியும் இருப்பதால் பல செலவுகள் வந்து சேரும்.

ஆனால், குருவின் பார்வையால் பெரும் தீங்கு ஏதும் நிகழாது. பெண்கள் குடும்ப நலனை முன்னிட்டு சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். 26, 27, 28 தேதிகளில் அதிக கவனம் செலுத்தி அலைச்சல், பண விரய செயல்களை தவிர்க்கவும்.

முன்பின் தெரியாதவரிடமிருந்து பணம் பெறுவதோ, தருவதோ வேண்டாம். அஷ்டமத்து ராகு உடல்நலத்திலும் கவனம் வைக்கச் சொல்கிறார். குருவருளால் தொழில் மற்றும் பணிகள் நல்லவிதமாக அமைகிறது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும்.

மிதுனம்
 மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்
உடல்நலத்தில் கவனம் வையுங்கள். 24, 25 தேதிகளில் செயல் வெற்றியும், கவுரவ மேன்மையும் கிடைக்கும். 26ம் தேதி சகோதர ஸ்தானத்திலிருந்து 4ம் வீடான தாய் வீட்டுக்கு செல்லும் புதன், தனலாபத்தை அருள்கிறார். 26, 27, 28 தேதிகளில் தன லாபம் நிச்சயம் உண்டு. 

சுக்கிரன் தனது 5ம் வீட்டு சஞ்சாரத்தால் சுக சவுக்கியங்களை அருள்கிறார். சுக்கிரன் விசாகம் 1ம் பாதத்தில் குருவின் காலில் நிற்பதாலும் உடன் செவ்வாயும் இருப்பதாலும் நிதானத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டு நற்பலன்களை பெறுவீர்கள். 

2, 6ம் வீடுகளை குரு பார்ப்பதால் தனம், செல்வாக்கு கூடியிருக்கும். கடன், வியாதி இல்லை. குடும்பத்தில் சுமுக நிலை ஏற்படும். விரக்தி மனோபாவம் மாறும். குடும்ப நலனை உத்தேசித்து சில விஷயங்களில் விட்டுக் கொடுங்கள். 

29, 30 தேதிகள் சரியாக இல்லை. குடும்பம், மருத்துவம், குழந்தை நலன் என்ற செலவுகள் ஏற்படலாம். கல்வி, வாகனம், தாய்வழி உறவுக்கான வசதி என புதிய செலவுகள் தோன்றும். தொழில் மற்றும் பணியில் மாற்றம் இல்லை. 

தொழிலில் நற்பெயரும், லாபமும் நிச்சயம் உண்டு. நில விஷயங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

ண விவகாரங்களில் வீண் கவலை உருவாகலாம். 2ம் வீட்டு புதன் 26ம் தேதி வரை தனலாபத்தையும் பின் வீண் கவலைகளையும் தருகிறார். 24, 25 தேதிகளில் கடின உழைப்பும், புதிய தொடர்புகளும் உருவாகும்.

3ம் வீட்டு சூரியன் சனியுடன் இணைந்து, குருவினால் பார்க்கப்படுவதால் பேச்சில் மெருகு கூடும். செயல்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு ஆதரவும், வழக்குகளில் வெற்றியும் கிட்டும். 26ம் தேதி 3வது வீட்டுக்கு மாறி வரும் குரு, பொறுமையை அதிகரிக்கிறார்.

முடியாத பிரச்னைகள் முடியும். கல்வி, தாயார் ஸ்தானத்தில் உள்ள செவ்வாய், சுக்கிரனால், பக்தி நாட்டம் மேலோங்கும். சிலர் கடுமையான விரதங்களை அனுஷ்டிப்பீர்கள். 6ம் வீட்டு ராகு தனலாபத்தை அருள்கிறார்.

26, 27, 28 தேதிகளில் செயல் வெற்றி, பணி, தொழிலில் மேன்மை பெறுவீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவோர் அதற்கான முயற்சிகளை துவக்கலாம். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும், அதனால் மனமகிழ்ச்சியும் பெறுவீர்கள்.

29, 30 தேதிகள் அதிர்ஷ்டகரமானவை. தனலாபம், தொழில் லாபம் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். தேவையில்லாத நட்பு வட்டாரம் விலகும். சிலர் குழந்தைகள் மேன்மை, வெற்றி செய்திகளால் மகிழ்ச்சி பெறுவீர்கள்

சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்
ஜன்ம ராசி புதன் பல புதிய திட்டங்களையும், அதை நடைமுறைப்படுத்த யுக்திகளையும் தருவார். 24, 25 தேதிகளில் சந்திரனின் எதிர்மறை சஞ்சாரத்தால் செயல்களில் கவனக் குறைவும், ஞாபக மறதியும் வரும்.

26ம் தேதி தனஸ்தானத்துக்கு வரும் புதன் பண வரவு தருகிறார். ஆனால், தயவு, தாட்சண்யம் இன்றியும், கோபமான வார்த்தைகளாலும் பல இடர்களை சந்திப்பீர்கள். 24, 27, 28 தேதிகளில் உடல்நலத்தில் கவனம் தேவை.

அலைச்சலும், உடல் அசதியும் வரலாம். 3ம் வீட்டு செவ்வாய், சுக்கிரன் தனலாபத்துக்கு வழி வகுக்கிறார்கள். புதிய வீடு, மனை வாங்க 29, 30 தேதிகளில் முயற்சிக்கலாம். மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.

குழந்தைகள், தந்தை உறவில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு பணி நிமித்தம் வெளியூர் பயணம் அல்லது பணி மாற்றம் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு கடன் அடைக்கப் பொருளுதவி கிடைக்கும்.

எதிர்பாராத விதத்தில் தொழில் ஒப்பந்தம், பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்ப பாரம் அதிகமாகி செலவும் கூடும். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சிறு சச்சரவுகள் உருவாகலாம். கையிருப்பு குறைந்து சில முக்கிய தேவைகளை தள்ளிப் போடவும் நேரிடும்.



துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்
மகிழ்ச்சியாக தொடங்கும் வாரம். 24, 25 தேதிகளில் மனம் மகிழ நிகழ்வுகள் அமையும். பணவரவு நிச்சயம் உண்டு. பழைய கடன்கள் அடைபடும். வாய்மையும், செயல் திறனும் அதிகமாகி பொருளாதார, கவுரவ மேன்மை பெறுவீர்கள்.

26ம் தேதி மிக சந்தோஷமான நாள். திருமணத்தை எதிர்நோக்கியிருப்போர் நல்ல தகவல் பெறுவர். 3ம் வீட்டு ராகு செயல் திட்டங்களை சீராக்குகிறார். நட்பு மற்றும் சகோதரர் உதவியால் குடும்பப் பிரச்னைகளை எளிதாக வெல்வீர்கள்.

குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும். தந்தையின் உடல்நலம் தேறும். கடன், நோய் கிடையாது. இருக்கும் உடல் உபாதைகளும் மறையும். 27, 28 தேதிகளில் விருந்து கேளிக்கைகளில் பங்கு பெறுவீர். குடும்ப பாசம், பழைய உறவுகளைப் புதுப்பிப்பீர்கள்.

தொழில் ஸ்தானம் குருவினால் பார்க்கப்படுவதால் தொழில் வளர்ச்சி மேன்மையுறும். பணியில் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் மாற்றத்துக்கும் வழியுண்டு.

29, 30 தேதிகள் சரியாக இல்லை. சந்திரனின் எதிர்மறை சஞ்சாரம் கோபப்படுத்தலாம். 8ம் வீடு செவ்வாயால் பார்க்கப்படுவதால், சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வேலை பளு மற்றும் கவனக்குறைவிற்கு ஆளாவீர்கள்; கவனம் தேவை.
 

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?.

Picture
Picture
மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்
Picture
.கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

பரபரப்பாக இயங்கி, கடுமையாக பேசத் தொடங்குவீர்கள். ஜன்ம ராசியில் நிற்கும் சூரியன், ஜன்ம சனியின் பலன் இல்லாமல் போகச் செய்கிறார். 24, 25 தேதிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். திருமணம் கைகூடும்.

பிரிந்து நிற்கும் அன்பர்கள் குடும்பத்துடன் இணைவீர்கள். 26, 27, 28 தேதிகள் பரபரப்பானவை. அதனால் செயல் தடுமாற்றம் வரும். செவ்வாய், சுக்கிரன் 8ம் வீட்டை பார்க்க, அங்கே சந்திரன் மறைய, செயல் திட்டங்கள் மாறும். சொல்லிலும், செயலிலும் குளறுபடிகள் ஏற்படலாம்.

29, 30 தேதிகளில் பிறர் வியக்கும் வண்ணம் நிலைமைகளை சமாளிப்பீர்கள். குரு பார்வையினால் சித்தம் தெளிவு பெறும். சகோதர, சகோதரிகள் ஆதரவு கிடைக்கும். இல்லறத் துணையின் பங்களிப்பு ஆதரவளிக்கும். தொழில் மாற்றம் தற்சமயம் இல்லை.

ஆனால், உபரி வருமானமும் தொழில் லாபமும் கிடைக்கும். மருந்து, பூச்சிக்கொல்லி, உரம், ரசாயனம் ஆகிய தொழில் அல்லது வியாபாரம் செய்வோர், மின்சார சாதன வணிகத்தில் ஈடுபட்டோர் நல்ல லாபத்தை பெறுவார்கள்.

வெளிநாடு அல்லது தொலைதூர ஊர்களுக்கு பயணம் செய்ய முயற்சிக்கலாம். குழந்தைகள் நலமாக இருப்பார்கள். கணவன், மனைவி ஒற்றுமை நல்லவிதமாக அமைகிறது. குடும்ப மேன்மைக்கு குறைவில்லாத வாரம்.

விருச்சிகம்


விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

பல வகைகளில் சுறுசுறுப்பாக இயங்கப் போகிறீர்கள். 24, 25 தேதிகள் தங்கள் திறமைக்குச் சவாலான நாட்கள். குடும்பத்தில் உங்கள் பங்களிப்பும், பண விஷயங்களில் சிறு நெருக்கடிகளும் தோன்றலாம். அவற்றில் இறையருளால் வெற்றி பெறுவீர்கள்.

26, 27, 28 தேதிகள் மிகச் சிறப்பானவை. உழைத்த உழைப்புக்கு பலனும் பாராட்டும், பணவரவும், கவுரவ மேன்மையும் கிடைக்கும். 5ம் வீட்டு குரு குழந்தைகளின் நலனை பாதுகாக்கிறார். ஜன்ம ராசியை குருவும், சனியும் இணைந்து பார்க்கிறார்கள்.

இதனால் தங்கள் முடிவுகள் தீர்க்கமாகவும் சரியானதாகவும் கண்டிப்பானதாகவும் அமையும். 26ம் தேதிக்குப் பிறகு தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அச்சகம், இசைத் துறையினர் சிறப்பு பலன் பெறுகிறார்கள்.

29, 30ம் தேதிகளில் நற்செய்திகள் காத்திருக்கின்றன. செவ்வாயின் 8ம் பார்வையால் அன்று சந்திர மங்கள யோகம் அமைகிறது. இதனால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. பேச்சில் கனிவும், தோற்றத்தில் பொலிவும் கூடி நீங்கள் பெருமைக்குரியவராகத் திகழ்வீர்கள்.

சயன சுகஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் அமைந்திருப்பது அவ்வளவு விசேஷம் அல்ல.

தனுசு


மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

எங்கே தவறு செய்தோம் என்று எண்ணிப் பார்க்கும் தருணங்கள் 24, 25 தேதிகளில் வரலாம். மனதில் குறுகுறுப்பும், சிறு பயங்களும் தோன்றக்கூடும். குடும்பம் மகிழ்ச்சியாகவும், அன்பு கொண்டதாகவும் அமையும்.

ஆனாலும் தாங்கள் அதில் நன்றாக பங்கெடுத்துக் கொள்ள இயலாதபடி பல வேலைகள் வந்து சேரும். 26, 27, 28 தேதிகளில் கையிருப்பு கரைந்து வீண் செலவுகள் வந்து சேரும். அஷ்டமஸ்தானம் குருவினால் பார்க்கப்படுவதால் உடல் ஆரோக்கியம் கெடாது.

9ம் வீட்டில் இருக்கும் புதன் தொழில் ஸ்தானத்துக்கு 26ம் தேதி முதல் மாறி வருகிறார். இதனால் தொழில் அபிவிருத்தி நிச்சயம் உண்டு. தொழில் மற்றும் பணியில் இருப்போர் மேலும் அபிவிருத்தி பெறுவார்கள். 29, 30 தேதிகள் அதிர்ஷ்டகரமானவை.

மனதில் தெளிவும், செயல்களில் வெற்றியும் பெறுவீர்கள். மருந்து, ரசாயனம், மருத்துவ தொழிலில் உள்ளவர்கள் நற்பலன்கள் பெறுவார்கள். லாபஸ்தானத்தில் உள்ள செவ்வாய், சுக்கிரன் பெரும் லாபத்தையும், சுகத்தையும் அருள்கிறார்கள்.

சுக, சவுக்கிய சந்தோஷம் கிடைக்கும். அரசுத் துறை, ரியல் எஸ்டேட் அன்பர்களும் சிறப்புப் பலன்கள் பெறுவார்கள். முக்கிய முடிவுகளை தீவிரமாக சிந்தித்து பின் செயல்படுத்துங்கள்.

 மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

சந்திரன் 3ம் வீட்டில் குருவுடன் 24, 25 தேதிகளில் அமர்கிறார். இதனால் சாதகமான பலன்களே ஏற்படும். புதிய அறிமுகம் நற்பயன் தரும். தேவையில்லாத நட்பும், சுற்றமும் அகலும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அஷ்டமஸ்தானத்து புதன் தனலாபம் தருகிறார். இல்லற துணையின் அன்பும் ஆதரவும் அமோகமாக அமையும். 26, 27, 28 தேதிகளில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். 6ம் வீட்டு கேது பண வரவுக்கு வழி செய்கிறார்.

பணி மற்றும் தொழில் ஸ்தானம் சிறப்பாக அமைகிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வங்கி கடன், அரசு, வழக்கு விவகாரங்களில் முடிவுகளை எதிர்பார்ப்போருக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் லாபம் அதிகரிக்கும்.

செவ்வாய், சுக்கிரனுடன் பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் கலைஞர்களுக்கு புகழ், பண வரவு கிடைக்கும். 29, 30 தேதிகளில் ஓய்வு தேவைப்படும். ஜன்ம ராசியை செவ்வாய் பார்ப்பதாலும் 6ம் வீட்டை சனி பார்ப்பதாலும் வார்த்தைகளில், செயல்களில் நிதானம் அவசியம் தேவை.

அதேபோன்று கருவிகள், ஆயுதங்கள் கையாளும்போதும் மிகவும் கவனம் தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

இரண்டாம் வீட்டில் 24, 25 தேதிகளில் சஞ்சரிக்கப் போகும் சந்திரன், குருவுடன் சேர்ந்து பொருளாதார, குடும்பச் சிக்கல்களை களைகிறார்.

குறிப்பாக 5ம் வீட்டில் கேது திருவாதிரை 2ம் பாதத்தில் ராகுவின் நட்சத்திரத்தில் நின்று சில சங்கடங்களை உருவாக்கினாலும் ராகு, குருவின் வீட்டில் நின்று, குருவாகவே பலன்களை அளிக்க முயல்வார்.

அதேபோன்று குருவுடன் சந்திரன் இணைந்து நிற்கும்போது குழந்தைகள் விஷயத்திலும், கவுரவ பிரச்னைகளிலும் ஆதரவாக பலன் அளிக்கிறார். 26, 27, 28 தேதிகளில் தேவையில்லாத தாழ்வு மனப்பான்மை உருவாகலாம்; யாரும் மதிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றலாம்.

அவ்வெண்ணங்களை களையுங்கள். இல்லத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். 9ம் வீட்டில் செவ்வாய் - சுக்கிரன் கூட்டமைப்பின் காரணமாக பொலிவும் நலமும் பெறுவீர்கள். தனலாபம், பொருள் லாபம், ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும்.

தொழில்காரகன் சுகஸ்தானத்தில் இருப்பதால் பணி, தொழிலில் வளம் உண்டாகும். 29, 30 தேதிகள் பணிச்சுமை மிகுந்தவை. உடல்நலம் கேடு ஏதும் இன்றி அமைகிறது. எதிர்பாராத தனலாபம் அல்லது தொழில் சம்பந்தமான நற்செய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.

மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி
சந்தோஷமாக தொடங்கும் வாரம். 24, 25 தேதிகளில் தனலாபம், குடும்ப சவுக்கியம், கவுரவம் கிடைக்கப் பெறுவீர்கள். 2, 3ம் வீட்டுக்குடைய செவ்வாய், சுக்கிரன் அஷ்டமத்தில் அமைந்திருப்பதால் கணவன், மனைவி ஒற்றுமை நல்லபடியாக அமையும்.

26, 27, 28 தேதிகளில் மனோதைரியம் கூடி பல நற்செயல்களையும், முக்கிய குடும்ப கடமைகளையும் செய்து முடிப்பீர்கள். நல்ல பேச்சு, செயல் திறன் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர், சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் மறையும்.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். பணி, தொழிலில் இருப்போர் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஜன்ம ராசியில் குரு நின்று 9ம் வீட்டை பார்ப்பதால் வெளியூர் பயணங்கள் அமையக்கூடும்.

29, 30 தேதிகளில் மனச்சஞ்சலம் தோன்றலாம். தேவையற்ற மனோபயத்தை கைவிடுங்கள். உடல்நலத்திலும் கவனம் வையுங்கள். புலால் மற்றும் மது வகைகளை கைவிடுதல் நலம். முடிவுகளை தீர்க்கமாக யோசித்து எடுத்தல் வேண்டும்.

பிறர் ஆலோசனைகளில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். சூரியன் - சனி சேர்க்கையும், செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கையும் இதை வலியுறுத்துகிறது.