தனுசு ராசி நேயர்களே

Picture
மூலம் பூராடம்,உத்தராடம் 1ம் பாதம்

தன்னம்பிக்கையும் கடமை உணர்வும் கொண்ட தனுசு ராசி நேயர்களே,உங்களுக்கு எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துகள் .

இந்த வருடம் உங்களுக்கு ஒரு சுமாரான வருடமாகத்தான் இருக்கும். வருடம் முழூவதும் 1, 7ல் இராகு கேதுக்கள். அதே நேரம் வருடத்தின் முன் பகுதியில் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்திலும், பின் பகுதியில் 4ம் இடத்திலும் பயணம் செய்கிறது. சனிபகவான் 10 இடத்தில் தொடர்ந்து இந்த ஆண்டு முழூவதும் பயணம் செய்கிறார். இருப்பினும் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குருபகவான் மீன ராசியில் பயணம் செய்யும் போதும் ஒரளவு நன்மையே செய்யும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை
தொழில் வியாபாரம் மந்தகதியை அடையும். சிலர் தங்களது தொழில், நிறுவனங்களை நஷ்டம் தாங்கமால் விட்டுவிட நேரிடும். சிலருக்கு கடன் தொல்லைகள் கட்டுங்கடங்காமல் போகலாம். சிலர் தாங்கள் இருக்கும் ஊரைவிட்டு வேறு ஊருக்கு குடி பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பு உண்டு.

மன நிலையில் நிம்மதி இருக்காது. தொழிலில் கவனம் செல்லாது. கொடுக்கல் வாங்கலில் நாணயத்துடன் நடந்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். கடினமாக உழைத்தாலும் கூட அந்த உழைப்பு வீணாகப் போகும்.உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிலர் சொந்தத் தொழில் செய்தவர்கள் ந்ஷ்டம் காரணமாக தன்னுடைய தொழிலைக் கைவிட்டு அடி மையாக வேலைக்குஸ் செல்வார்கள்.

உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்படும். புத்தியில் மந்தமான நிலை ஏற்படும். சகோதர்களுடன் கருத்துவேறுபாடு மற்றும் விரோதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தாயார் உடல் நிலையில் கவனம் தேவை. தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படும். தாயார் சார்ந்த உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும், விரோதங்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வீடு நிலம், போன்றவற்றை விற்க வேண்டிய வாகனம் வீடு இவைகளால் மராமத்து செலவுகளும், விரய செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பயணங்களின் போது எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மாணவர்களுக்கு கல்வியில் மனம் செல்லாது. மற்றவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கைகொடுக்காது.கணவன் மனைவி உறவு சந்தோஷம் நிறைந்ததாக இருக்காது. ஆனால் வருகிற மே மாதம் முதல் குருபகவான் மீன் ராசியில் பிரவேசிப்பதால் அது அவரது ஆட்சி வீடு சனியும் குருவும் நேருக்கு பார்த்துக்கொள்வதால் இருவராலும் தங்களது பலங்களை சரியாக செய்யமுடியாது. தாயார் உடல் நலம் பெறுவார். தாயாதி உறவினர்களுடன் சுமுகமான உறவு நிலைத்திருக்கும்.

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவைகேற்ற வம்பு வழக்குகள்,வில்லங்க விரையங்கள் தீர்ந்து போகும். குடும்பத்தில் சுப செலவுகளும் சுப விரையங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புத்திர புத்திரிகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை அவர்களுக்கு திருமணம் நடைபெறாமால் இருந்தால் தற்சமயம் திருமணம் நடைபெறும் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. திருமணம் போன்ற சுப காரியங்கங்கள் தடைபட்டு இருந்தால் தற்போது அந்தத் தடைகள் நீங்கி சிறப்பான முறை யில் திருமணம் நடைபெறும்.

பரிகாரம்;

ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு வேளையில் எலுமிச்சமாலை காளிக்கு சார்த்தி வழிபட்டு வரவும். வியாழன் தோறும் தக்ஷிணாமூர்த்தியை வணங்கிவர இந்த ஆண்டு முமூவதும் உங்களுக்கு நல்ல ஆண்டாகவே இருக்கும்.