படைப்புகள் அனுப்ப விரும்புபவர்களுக்கு...

Picture


அன்புடையீர்! வணக்கம்.

  •  உலகின் எப்பகுதியில் இருப்பவரும் இன்பர்சிட்டி.காம்  இணைய இதழுக்குத் தமிழில் படைப்புகளை அனுப்பலாம்.

  • இன்பர்சிட்டி. காம்  இற்கு அனுப்பும் படைப்புகள் பிற இணைய இதழ்களில் வெளியிடப்படாததாக இருக்க வேண்டும்.

  • இன்பர்சிட்டி. காம்  இணைய இதழில் வெளியாகும் அனைத்துப் படைப்புகளுக்கும் அதன் படைப்பாளர்களே முழுப் பொறுப்பு என்பதுடன் படைப்புகள் யாருடைய மனதும் புண்படாதவாறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து படைப்புகளை அனுப்ப வேண்டும்.

  • படைப்புகள் தமிழ் ஒருங்குறி எழுத்துரு (Tamil Unicode Font) கொண்டு அனுப்புவது விரும்பப்படுகிறது.

  • தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்தும்  இன்பர்சிட்டி. காம்  இணைய இதழில் அடுத்து வரும் புதுப்பித்தலில் இடம் பெறும். இரண்டு கிழமை காலத்திற்குள் இடம் பெறாவிடில் படைப்பு நிராகரிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும்.

  • இன்பர்சிட்டி. காம்   இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளைப் பிற இணைய இதழுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். ஒரே படைப்பு பல இணைய இதழ்களில் இடம் பெறுவதை இன்பர்சிட்டி. காம் விரும்புவதில்லை. அப்படி ஒரே படைப்பு பிற இணைய இதழ்களிலும் வெளியிடப்படும் நிலையில் அப்படைப்பாளரின் படைப்புகள் வெளியிடுவது நிறுத்தப்படும்.

  • இது போல் இன்பர்சிட்டி. காம்  இணைய முகவரி தவிர  பிற இணைய முகவரிகள் மின்னஞ்சலில் காணப்பட்டாலும், அடையாளம் காட்டப்படாத மின்னஞ்சல்கள் எனக் குறிப்பிடப்பட்டாலும் அந்தப் படைப்பு பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்படும்.

  • இன்பர்சிட்டி. காம்  வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் அதன் படைப்பாளர்களுக்கு முழு உரிமையானது. இருப்பினும் தமிழ் இணையப் பயன்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில்  இன்பர்சிட்டி. காம் இணைய இதழில் இருந்து மீள்பதிவு* செய்து கொள்ளும் அனுமதிக்குக் கட்டுப்பட வேண்டும்.

  •   இன்பர்சிட்டி. காம் இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.  மேலும் படைப்புகளைப் படைப்பாளரின் கருத்துக்கள் மாறாதபடி இன்பர்சிட்டி. காம்  இணைய இதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ, திருத்தம் செய்யவோ ஆசிரியருக்கு முழு உரிமையுண்டு.

  • இன்பர்சிட்டி. காம்  இணைய இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு தற்சமயம் பரிசாக எதுவும் வழங்க முடியவில்லை.
        எதிர்காலத்தில் சன்மானம் வழங்கும் எண்ணமுண்டு.
                

                படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: infoinparuddy@gmail.com

            * படைப்புகளை மீள்பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு...


  •  இன்பர்சிட்டி. காம்  இணைய இதழில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் அதன் படைப்பாளர்களுக்கே முழுவதும் உரிமையானது. இருப்பினும் தமிழ் இணையப் பயன்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இன்பர்சிட்டி. காம் இணைய இதழில் வெளியான படைப்புகளை அச்சு இதழ்களிலோ அல்லது வேறு இணைய இதழ்களிலோ அல்லது தமிழ் வலைப்பூக்களிலோ பயன்படுத்திக் கொள்ள கீழ்காணும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

1. படைப்புகளின் தலைப்பையோ அல்லது அதில் வெளியாகியுள்ள கருத்துக்களையோ எவ்விதத்திலும் மாற்றாமல் அப்படியே              பயன்படுத்த வேண்டும்.

2. படைப்புகளின் படைப்பாளர் பெயர் அதில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. படைப்புகளின் கீழ் நன்றி: இன்பர்சிட்டி. காம் இணைய இதழ் என்று குறிப்பிட்டு அந்த இணையப் பக்கத்தின் இணைய முகவரி அவசியம் வெளியிடப்பட  வேண்டும்.