மகரம் ராசி நேயர்களே
உத்தராடம் 2,3,4ம் பாதங்கள் திருவோணம் அவிட்டம்1,2 பாதங்கள்.்
மன உறுதியும் செயல்படும் திறனும் கொண்ட மகர ராசி நேயர்களே. உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான பலன்களே நடைபெற இருக்கின்றன.முதல் 4 மாதங்கள் குரு 3ல் ஆட்சி பெறுவதும், சனி 9ல் இருந்து குருவின் பார்வையைப் பெறுவதும் உங்களுக்கு எந்த சோதனையும் ஏற்படுத்தாது என்பதனை திட்டவட்டமாக நம்பலாம். அப்படியே சோதனை ஏற்பட்டாலும் கூட அது நீங்கள் நிகழ்த்தவிருக்கும் சாதனைக்கு அடிப்படையாக இருக்கும் என்பதை நீங்கள் திடமாக நம்பலாம். இனி இந்த 2010 ஆண்டிற்கான பலங்களைக் காணலாம்.
மனோபலம் அதிகரிக்கும் எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை தோன்றும். உங்களுடைய செயல்பாடுகளில் புத்திசாலித்தனமும் சாதுர்யமும் வெளிப்படும். திருமணம் ஆகாமல் உங்களுக்குத் திருமணத்தடைகள் ஏற்பட்டிருந்தால் அந்தத் தடைகள் நீங்கி தற்சமயம் திருமணம் நடைபெறும் காலமாக இது இருக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய புத்திரன் புத்திரிகள் படித்துகொண்டிருந்தார்களே என்றால் அவர்களது கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதப்பட்டு தடைப்பட்டு வந்திருந்தால் அந்த தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சுபகாரியங்கள் நடைபெறும். வேலை வாயப்பிற்காக காத்திருந்தார்களேயானால் தற்சமயம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. அலைச்சலுக்கேற்ற வருமானம் இருக்கவே செய்யும். அயல் நாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்குஅயல் நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உடல் நலம் பெறும். மனதில் உற்சாகம் பிறக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் போன்ற பிரச்சனைகள் இருக்குமானால் அவை நல்ல முறையில் தீர்ந்து உங்களுக்கு சாதகாமாக முறையில் முடியும்.
அதுபோலவே 4ம் இடத்தில் குரு ஆட்சி பெறும் போது தாயார் நலமடைவார். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய வண்டிவாகனம் வங்குவதற்காக வாய்ப்பு உண்டு. சிலர் வீடு நிலம் மனை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தெய்வதரிசனமும், ஞானிகளின் தரிசனமும் கிடைக்கும். உறவினர்களுடன் நல்ல நட்புறவும் இனக்கமான உறவும் நிலவும். விருந்தினர்களின் வருகை அதிகமாகும். அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியும்.நிம்மதியும் கிடைக்கும்.
என்னதான் நீங்கள் உங்கள் செயல்களில் வெற்றி பெற்றாலும் கூட ஒன்பதாம் இடத்தில் உள்ள சனி பகவானால் சிற்சில தொல்லைகள் இருக்கவே செய்யும். தொழில் ரீதியாக பல ஊர்களுக்கும் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் அலுவலகத்தில் உள்ளவர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். அதே சமயம் அலைச்சலும் அதிகமாக இருக்கும். சொந்த வீடு மனைவி மக்களை விட்டு பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவார்கள்.
எந்தக் காரியத்தையும் உங்கள் முயற்சியின் காரணமாக வெற்றிகரமாக செய்து முடித்தாலும் கூட மனதில் ஏதோ ஒருகவலை குடி கொண்டே இருக்கும் இதன் விளைவு முகத்திலும் தெரியவே செய்யும். மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம்;
பிரதோஷம் தோறும் சிவபெருமானை வழிபட்டும், தேய்பிறை அஷ்டமியன்று பைரவரையும் வழிபட்டு வர இந்த ஆண்டு முமூவதும் உங்களுக்கு சிறப்பானஆண்டாக இருக்கும்.