Picture

உங்கள் சமையல் குறிப்புகள் அழகு
குறிப்புகளை
எழுதி அனுப்புங்கள்.
இ-மெயில் inparuddy@gmail.com

Picture
Picture

சமையல்

Picture

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க

Picture




பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர் கூறுவது இதுதான்...

  • பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.

  • கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப் போய் காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

  • இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கும்.

  • கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.


மேனியை மெருகூட்ட  ....

Picture
அழகான பெண்கள் கூட படிப்பு, வேலை என வெளியில் சுற்றும்போது கருத்து விடுகிறார்கள். நேரமின்மையால் தங்களின் தோற்றம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால் ஆரோக்கியமான சருமம் வேண்டுமெனில் சிறிது நேரமேனும் அதற்காக மெனக்கெடுவதில் தவறில்லை.

வுட் லேம்ப் ஃபேஷியல்:

இதைச் செய்து கொள்ளுவதற்கு முன் அழகுக் கலை நிபுணரிடம் சருமத்தைக் காட்டி தங்களுடையது வறண்ட சருமமா அல்லது எண்ணெய்ப் பசை சருமமா என்பதைக் கண்டறிய வேண்டும். வுட் லேம்ப் அதைக் கண்டுபிடித்து விடும். எண்ணெய் சருமமாக இருந்தால் மஞ்சள் புள்ளிகள் தெரியும். வறண்ட சருமம் எனில் வெள்ளைப் புள்ளிகள் தெரியும். அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.

முகத்தின் திடீர் பளபளப்புக்கு "ஆக்ஸிஜன் ப்ளீச்":

இந்த ப்ளீச்சில் ஆக்ஸிஜன் கலந்து இருப்பதால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் வராது. முகத்தில் உள்ள பூனை முடிகள் கூட சரும நிறத்துக்கு மாறிவிடுவது இதன் கூடுதல் சிறப்பு.

கோல்டு பேஷியல்:

மணப்பெண்களால் விரும்பி செய்யப்படும் ப்ளீச் இது. 24 காரட் கோல்டு க்ரீம் என்பதால் மிக விரைவில் முகம் பொலிவடையும். ஜெல் மாஸ்க் போடுவதால் முகம் வழவழப்பாக மாறும்.

கழுத்து மசாஜ்:

இயல்பிலேயே அழகான முகம் என்றாலும் மன அழுத்தத்தால் முகம் சுருங்கிக் கொள்ளும். சிலருக்கு கழுத்தில் துர்நீர் சேர்ந்து கொண்டாலும் மன அழுத்தம் அதிகரித்து தலைவலி உண்டாகும்.

பின் கழுத்தில் உள்ள அழுத்தப் புள்ளிகளை மசாஜ் செய்வதால் டென்சன் குறைந்து ரிலாக்ஸ் ஆகலாம்.

வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சைகள்:

1 டீஸ்பூன் ஜெலட்டினை 1/2 கப் வெந்நீரில் கரைத்து அதில் கை, கால் நகங்களை ஊற வைத்தால் நகங்கள் உடையாது, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

1 டேபிள்ஸ்பூன் கேரட் சாறில் 2 டீஸ்பூன் பாதாம் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பயறு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்த விழுதை முகம், கை, கால் என வெயில்படும் இடங்களில் தடவி வந்தால் வெயிலால் கருத்த சருமம் நிறம் மாறும்.

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் கலந்து லேசாகச் சூடுபடுத்தி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிராமல் செழிப்பாக வளரும்.

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு...

Picture
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும்.

எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.

தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும்.

பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம். அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் திக்காக கன்னாபின்னாவென வளரும்.

புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காய வைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது அழகாக, இயற்கையாக இருக்கும்.

கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.

புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரோஸ்மெரி, யிலாங் யிலாங் மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகச் சிறந்தவை. அவற்றை சூடு படுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்கலாம்.


உங்கள் காதலை இங்கே உரசிப்பாருங்கள்

Picture

பெண்களைக் கவர சில வழிகள்..

Picture
.  மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். பெண்ணின் அம்மாக்களை வேண்டுமானால் உங்கள் பேச்சுக்கவரலாம். பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

முகத்தை சீரியஸாய் வைத்துக்கொண்டிருந்தால் பெண்களுக்குப் பிடிக்காது. உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணைப் பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள், பாராட்டுகிறீர்கள் என்று எண்ணி, ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள்.

சினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனத்திலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள்.

'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே?" என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். 'நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியிலா படித்தீர்கள்? நீங்கள் யாழ்ப்பாணமா?" இப்படிக் கேளுங்கள்.

'நீ என்ன நட்சத்திரம்?" என்றோ, 'நீங்கள் ஐந்தாம் திகதியில் பிறந்தவரா?" என்று கேளுங்கள். பெரும்பாலான பெண்களுக்கு ஜோசியம் பிடிக்கும்.

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!

Picture
பெண்களுக்கு இப்பகுதி மிகவும் உபயோகமானது. காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்? எப்படி சமைக்கவேண்டும்? எப்படி பாதுகாக்கவேண்டும்? காய்கறிகள் பாதுகாப்பு: கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும். கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்து விடும். ஒரு புதிய மண்பானையில் காய்கறிகளைப் போட்டுப் பானையை ஈரமுள்ள மணல் மேல் வைத்தால் இரண்டொரு நாள் வரை காய்கறிகள் புகிதாகவே இருக்கும்.

நீரில் நனைத்த காகிதத்தினால் கீரைகளைச் சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.

குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை வைக்கும் போது அவைகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவர்களில் வைக்க வேண்டும். எல்லாக் காய்கறிகளும் ஒரே பையில் வைக்கக் கூடாது.

கூடையில் காய்களைப் போட்டு ஈரத்துணியினால் மூடி வைத்திருந்தால் பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.

பச்சை மிளகாயைக் காம்புடன் வைத்தால் சீக்கிரம் வாடிவிடும். சில நாட்களுக்கு மிளகாய் இருக்க வேண்டுமென்றால் அதன் காம்பை அகற்றி விட்டு நிழலான, குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.

பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் போது அதை உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாயை நன்கு இறுக்க கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல் இருக்கும்.

வாழைப் பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. வைத்தால் அதன் தோல் கறுத்துப் போய்விடும்.

பூ வாடாமல் இருக்க: முதல் நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்த பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடி வையுங்கள். பூ வாடாமல் வதங்காமல் நீங்கள் வைத்த மாதிரியே இருக்கும்! 

கிழங்கு விரைவாக வேக: கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

பாகற்காய் பழுக்காமல் இருக்க: பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க பாகற்காய்களை இரண்டிரண்டாக நறுக்கி வைத்துவிடுங்கள்.

இஞ்சி மிச்சம் இருந்தால்: இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்­ர் விட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.