Picture
மட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம்: 60 பேர் பலி! - டைனமற் கொள்கலன்கள் வெடித்தன

.இன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் 50க்கும் அதிகமானவர்கள் இதுவரையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்துள்ளவர்களில் பொது மக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.
ரொய்ட்டர் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனங்களின் செய்திகள் 
சீனா நிறுவனமொன்றால் பெருந்தெருக்கள் மற்றும் கற்பாறையகழ்ந்து கல்லுடைத்தல் வேலைகளிற்காகக் கிழக்கு மாகாணத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட “டைனமற்” கொள்கலன்கள் இரண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் 
பாதுகாப்புக் காரணங்களிற்காக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவற்றில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக மேற்படி டைனமற் வெடித்துப் பாரிய சேதத்தை ஏற்படுத்தின என்றும் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 2 சீனர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்களில் அநேகர் மேற்படி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் என்றும் ரொய்ட்டர் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனங்களின் செய்திகள் மூலம் தெரியவருகிறது.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது?
பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல், பாறையகழ்தல் வேலைகளிற்கான மேற்படி டைனமற் நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்புக் காரணங்களிற்காக பொலிஸ் நிலைய வளவிற்குள்ளேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன என்றும் மேற்படி சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தங்களிற்கு தேவையான அளவு வெடிமருந்தை மேற்படி கொள்கலன்களிலிருந்து பெறுவார்கள் என்றும்,
அதே போன்று இன்று தமக்கு தேவையான டைனமற்றை எடுத்துக் கொண்டு கல்குவாரிக்குச் செல்வதற்காக வருகை தந்த மேற்படி சீன நிறுவனத்தினர் டைனமற்றை தங்களின் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களும் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.


Picture

மேலும் செய்திகள்

 

- கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை :    அதிர்ச்சி தகவல்கள்
 - ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள்   குருதியில்  தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா

Picture

சிறப்புச் செய்தி

Picture
சிங்களர்கள் மனதில் ராஜபக்ஷே விதைத்த சிந்தனைகள் - யோகேஸ்வரன் எம்.பி. சிறப்புப் பேட்டி

Picture

மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?

Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

திரை விமர்சனம்

Picture

 இரண்டு முகம்

ஊழல் வெள்ளை சட்டைக்கும், நேர்மையான கோட்சூட்டுக்கும் இடையில் நடக்கும் அரசியல் நாடகம்

இவ் வார அழகு

Picture

    எந்திரன்

Picture

  யுத்தம் செய்

Picture

   வாடா போடா

Picture

        தா

Picture

கவிதை

காத்திருக்கும் காலம்    -  இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

சிறுகதைகள்

நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும்   -இளந்திரையன்

கட்டுரைகள்

 கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன?       -பழ.நெடுமாறன்

ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன?     -கலைவேலு
 
 
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்  - சூரியதீபன்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்

காசா: அறங்கள் மடிந்த இடம் -         அ.முத்துக்கிருஷ்ணன் 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்

மகளிர் மந்திரம்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
Picture
Picture
Picture
Picture