மிதுன ராசி நேயர்களே (கார்த்திகை 2,3,4, பாதங்கள், ரோகிணி,மிருகசீரிடம் 1,2,ம் பாதங்கள்.)

Picture


பிறந்த மண்ணையும் பேசும் மொழியையும் பொன்னாக மதிக்கும் நீங்கள், சொந்த உழைப்பால் முன்னேறக் கூடியவர்கள். உங்கள் ராசியை ஐந்து கிரகங்கள் பார்க்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிப்பீர்கள். ஆனால் உங்கள் ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். குருபகவான் வருட முற்பகுதி வரை சாதகமாக இருப்பதால் தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் இனம் புரியாத கவலை, வாக்குவாதங்கள் என இருந்ததே! இனி வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன பனிப்போர் வரும் என்றாலும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. இருவரும் தங்கள் வழி சொந்தம் பந்தங்களை பெருமையாகப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். திடீர் பயணங்களுக்கு குறையிருக்காது. நண்பர்களுடன் வீண் பேச்சைக் குறைக்கப்பாருங்கள். பிள்ளைகளிடம் அதிக நேரம் பேசி அவர்களின் அடிமனதிலிருக்கும் தாழ்வுமனப்பான்மைகளை குறைக்கப்பாருங்கள். அவர்களின் உயர்கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். நினைத்தபடி வேலை கிடைக்கும். மகளுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மார்ச், ஏப்ரம், மே மாதங்களில் கையில் காசுபணம் புரளும். சொத்து சேரும். தடைபட்ட காரியங்களை முழுவேகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். வழக்கில் இருந்து வந்த தேக்கநிலை மாறும். அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களிடையே மனத்தாங்கல் வரும். யாருக்கு ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 7-ல் ராகு நிற்பதால் மனைவியுடன் விவாதங்கள், சந்தேகம், பிரிவு வரும். முன்கோபத்தை குறைக்கப்பாருங்கள். குருபகவான் ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். கடுமையாக உழைத்து கையில் காசுபணம் சேரவில்லையே என புலம்பித்தவித்தீர்களே! இனி சேமிக்கத்தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வேலை கிடைக்கும். தகப்பானருடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். தந்தை வழி சொத்தை அடைவதில் இருந்த தடைகள் விலகும். 22. 5.2010 முதல் 27. 9.2010 வரை உங்கள் யோகாதிபதி சனிபகவானின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு உண்டு. ஆபரணம் சேரும். ஆனால் மனைவிக்கு உடல்நலக்குறைவும், மருத்துவச் செலவும் வந்துபோகும். வியாபாரிகளே! அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த பிட் நோட்டிஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். உத்யோகஸ்தர்களே! இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. செப்டம்பர் மாதத்தில் வேறு சில வாய்ப்புகளும் வரும். என்றாலும் 4. 5.2010 முதல் 6. 11.2010 வரை குரு 10-ம் வீட்டிற்கு செல்வதால் மறுக்கப்பட்ட உரிமைகளை பெற சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். கன்னிப் பெண்களே! முடிவெடுக்கமுடியாமல் திணறினீர்களே! இனி சுயமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். மாணவர்களே! நண்பர்களுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மறையும். படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் சாதிப்பீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையுடன் நெருக்கமாக இருந்தாலும் அவரின் சொந்த விஷயங்களில் தலையிடாமலிப்பது நல்லது. சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளால் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி உற்சாகமாகி தடைபட்ட வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். விவசாயிகளே! பயிரை பாதுகாக்க பலவகை மருந்துகளைப் போட்டும் பயனில்லாமல் போனதே! இனி அந்த நிலை மாறி மகசூல் பெருகும். மாற்றுப்பயிரால் லாபம் உண்டாகும்.