மீனாவை வெட்கப்பட வைத்த ரஜினி
(Rajini's salutations to Meena) Comments அவ்வளவு களேபரத்திலும் மீனாவை பார்த்து நலம் விசாரித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இடம் சௌந்தர்யா திருமண வரவேற்பு. சற்றே பூசிய அழகான மீனா இப்போ ஆறு மாசம். வேறு கல்யாணமாக இருந்திருந்தால் வீட்டிலிருந்தே ஒரு பொக்கே அனுப்பியிருப்பார். சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணமாச்சே. சுமையோடு காரேறி வந்துவிட்டார். அவ்வளவு கூட்டத்திலும் அலுங்காமல் குலுங்காமல் அழைத்து வந்தார்கள் செக்யூரிடிகள். மணமக்களை வாழ்த்திவிட்டு நகர்ந்த மீனா, ரஜினியையும் பார்த்து பேசினார். அந்த நேரத்தில்தான் எத்தனை மாசம்மா என்று விசாரித்தாராம் சூப்பர் ஸ்டார். ஆறாவது மாசத்திலிருந்து ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நிறைய பழங்கள் சாப்பிடணும் என்று அட்வைஸ் கொடுத்தவர், படுக்கும் போது எந்த பக்கமா திரும்பி படுக்கிறே? வலது கை பக்கமாவா? இடது கை பக்கமாவா? என்று கேட்க வெட்கத்தில் முகம் சிவந்து போனார் மீனா. அவர் கேட்டதற்கு பின்னால் ஒரு வலுவான காரணம் இருப்பதை அப்புறம்தான் புரிந்து கொண்டார் மீனா. பெண்கள் இடது பக்கமாக படுத்தால் பெண் குழந்தை பிறக்குமாம். எந்த பக்கம் என்று சொன்னாரா மீனா? சொன்னாராம். ஆனால் அதுதான் சஸ்பென்ஸ்! ஹய்யோடா....இன்னும் நாலு மாசம் காத்திருக்கணுமே!