நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை வீழ்ச்சியடைச் செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் : அரசாங்கம்    

Picture
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை வீழ்ச்சியடைச் செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் நாடு கடந்த இராச்சியம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அமெரிக்க எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக லக்பிம சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து விசேட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இரு நாட்டு தூதுவராலயங்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிற்கு சரியான முறையில் தெளிவுபடுத்தவும், தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு வெவ்வேறு பெயர்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விடுதலைப் புலிகள் இயங்கி வருவதாகவும் அமெரிக்காவிலும் புலிகள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் வலையமைப்பு செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டியது தூதுவராலயத்தின் கடமையாகும் என தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.


Picture

மேலும் செய்திகள்

 

-ஆஸ்திரேலியா பிரதமராக ஜூலிய கில்லார்டு பதவி ஏற்றார்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை --  அதிர்ச்சி தகவல்கள்
 - ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள்   குருதியில்  தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா

Picture

திரை விமர்சனம்

Picture

 இரண்டு முகம்

ஊழல் வெள்ளை சட்டைக்கும், நேர்மையான கோட்சூட்டுக்கும் இடையில் நடக்கும் அரசியல் நாடகம்

இவ் வார அழகு

Picture

    எந்திரன்

Picture

  யுத்தம் செய்

Picture

   வாடா போடா

Picture

        தா

Picture

கவிதை

காத்திருக்கும் காலம்    -  இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

சிறுகதைகள்

நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும்   -இளந்திரையன்

கட்டுரைகள்

 கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன?       -பழ.நெடுமாறன்

ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன?     -கலைவேலு
 
 
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்  - சூரியதீபன்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்

காசா: அறங்கள் மடிந்த இடம் -         அ.முத்துக்கிருஷ்ணன் 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்

மகளிர் மந்திரம்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
Picture
Picture
Picture
Picture
Picture