ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4, பாதங்கள், ரோகிணி,மிருகசீரிடம் 1,2,ம் பாதங்கள்.)
வாழ்க்கையை சிறப்பாக சுவைக்கத் தெரிந்த கலையுள்ளம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே. உங்களுக்கு எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.இ ந்த ஆண்டின் முற்பகுதிய தொல்லை தந்தாலும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும்.
வருமானத்தில் தொய்வான நிலை காணப்படும்.தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த அளவு முன்னேற்றம் இருக்காது.கொடுக்கல் வாங்கலில் சற்று
சிரமமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு தொழில் செய்யும் இடத்தில் பிரச்சனைகளும், தொல்லைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குடும்பத்திற்கான தேவைகள் அதிகமாக இருக்கும்.ஆனால் அவற்றை எல்லாம் சமாளித்து தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களால் முடியாமல் போகும். அதன் காரணமாக வெளியில் கடன் வாங்கவோ நகைகளை இடத்தை, வீட்டை அடமானம் வைக்கவோ அல்லது விற்கவோ வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.
அலுவலகத்தில் பணியின் கடுமை அதிகமாகும்.எப்படித்தான் வேலைப் பார்த்தாலும்கூட மேலதிகாரிகளை உங்களால் திருப்திப்படுத்தவோ முடியாது.
உடன் பணி செய்யும் பணியாளர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டர்கள்.மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். கோர்ட் கேஸ் வம்பு வழக்குகள் என்று அலைய வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம்.
உறவினர்கள் விரோதிகளாக மாறும் வாய்ப்பு உள்ளது.சகோதர சகோதிரிகளுடன் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் அவர்களால் அவமானங்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
வியாபாரிகளுக்கு அரசு அலுவலர்களால் தொல்லைகள் ஏற்படகூடும். வர வேண்டிய பணம் வந்து சேராது.நீங்கள் நல்லவர்களாகவே இருந்தலும் தற்சமயம் மற்றவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக்கொள்ள மாட்டார்கள்.
திருடர்களால் தொல்லைகள்,மற்றும் வாத பித்த சம்பந்தமான நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு அரசு தண்டனை கிடைக்கக் கூடும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வீடு மற்றும் கட்டுமான பணிகள் ஏதாவது இருந்தால் அவை தடைபட தற்போது வாய்ப்புகள் உண்டு.
புத்திரிகளின் வாழ்க்கை முன்னேற்றம் தடைபட வாய்ப்புகள் உண்டு. அவர்களுடைய திருமணம் வேலை வாய்ப்புகள் போன்றவை காலதாம்தம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.வருமானம் குறையும் . குடும்பத்திற்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாக கூடும்.
வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். ஆயினும் மே மாதத்திற்கு மேல் வாழ்க்கை
சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஒன்று நடக்கும். புத்திர புத்திரிகள் மேன்மை அடைவார்கள். கோர்ட் கேஷ் வழக்குகள் இருந்தால் அவை உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் முடியும்.
தொழில் வியாபாரம் மேன்மை அடையும்.கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். நாணயமானவர் என்று பெயர் எடுப்பிர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தேவையான வருமானம் வந்து கொண்டே இருக்கும்.நாங்கு மாத க்ஷொதனையைத் தந்தாலும் கடைசி 8
மாதங்கள் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதில் ஆய்யமில்லை.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபடவும். ஞாயிறு மாலை ராகுவேளைகளில் காளிகோவிலில் விளக்கேற்ற இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும்.