4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிப்பு

Picture

மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000  ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய  இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த  நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள்  கருதுகின்றனர்.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய  காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம்.

இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு  வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை  கண்டுபிடித்துள்ளனர்.

பிபிசி தொலைக்காட்சியில் ‘ஜிக்ஷீணீநீளீவீஸீரீ ஜிலீமீ கிக்ஷீஹ்ணீஸீs'  என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில்,  இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம்,  இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார்.

இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள்  குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது.  சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல்  ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும்  இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர்.

அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம்  இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல  ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை  அவரது குழு மேற்கொண்டு வருகிறது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில்  மேல் நோக்கு வளைவான அமைப்பு [^] கூடிய 20 வீடுகள், மேக்-அப்  சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள்,  ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில்  ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக்  கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில்  இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி்  இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல  இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும்,  இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று  புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள  ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது  என்றார்.

இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்'  பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Picture

மேலும் செய்திகள்

 

-ஆஸ்திரேலியா பிரதமராக ஜூலிய கில்லார்டு பதவி ஏற்றார்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை --  அதிர்ச்சி தகவல்கள்
 - ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள்   குருதியில்  தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா

Picture

திரை விமர்சனம்

Picture

 இரண்டு முகம்

ஊழல் வெள்ளை சட்டைக்கும், நேர்மையான கோட்சூட்டுக்கும் இடையில் நடக்கும் அரசியல் நாடகம்

இவ் வார அழகு

Picture

    எந்திரன்

Picture

  யுத்தம் செய்

Picture

   வாடா போடா

Picture

        தா

Picture

கவிதை

காத்திருக்கும் காலம்    -  இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

சிறுகதைகள்

நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும்   -இளந்திரையன்

கட்டுரைகள்

 கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன?       -பழ.நெடுமாறன்

ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன?     -கலைவேலு
 
 
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்  - சூரியதீபன்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்

காசா: அறங்கள் மடிந்த இடம் -         அ.முத்துக்கிருஷ்ணன் 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்

மகளிர் மந்திரம்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
Picture
Picture
Picture
Picture
Picture