நாக தேவதையின் அவதாரம் என வழிபட்டு வரும் குழந்தை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
சிலாபம், மாரவில பிரதேசத்தில் நாக தேவதையின் அவதாரம் என வழிபடப்பட்டு வரும் குழந்தை ஒன்று தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமது பிள்ளைக்கு நாக தேவதையின் அருள் கிட்டியுள்ளதாகவும், குழந்தையை வழிபடுவோருக்கு அருள் கிட்டும் எனவும் குழந்தையின் தந்தை பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழந்தை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த குழந்தையை பாடசாலைக்கு அனுப்பாது பூஜை வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தையின் தந்தை வீட்டுக்கு எதிரில் நாக கோயில் ஒன்றையும் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாக தேவதையாக வர்ணிக்கப்படும் குறித்த குழந்தை தற்போது வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழந்தை பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்து வருவதாகவும், பிரதேச மக்கள் இந்தக் குழந்தையிடம் அருள்வாக்குப் பெற்றுக்கொள்ள அணி திரண்டு செல்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.